உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

175

நான் குடியிருக்கும் வீடு இன்று இங்கேயே 80 உருபா விற்குத்தகும். வீட்டுக்காரரிடம் ஒருவர் போய் 110 உருபா வாடகை கொடுப்பதாகச் சொல்லியிருக்கின்றார். வீட்டுக்காரர் சற்றுத் தமிழ்ப்பற்றும் என்மீது மதிப்புங்கொண்டவர். ஆதலால் 10 உருபா தான் உயர்த்தச் சொன்னார். நான் 5 உருபாதான் உயர்த்த முடியும் என்றேன். அதற்கு இசைந்துவிட்டார். சென்ற மாதத்தி லிருந்து வாடகை 60 உருபா. இதற்குமேல் இன்று என்னால் கொடுக்க இயலாது. செந்தண நிலைப்பாட்டு அறை (Air-condi- tioned room) கட்ட இன்று அவரிடம் தாராளமாகப் பண மில்லை. இருந்து கட்டினும் வாடகை 100 உருபா ஆகிவிடும். வருகின்ற வேனிற்கு வால் பாறையில் தங்குமாறு என்னை அழைக்கும் தமிழ்ப்புலவர் முழுச் செலவையும் தாமே ஏற்றுக் கொள்வார். போகவர வழிச்செலவு தான் எனது. ஆதலால்

இழப்பொன்றுமில்லை.

ஒப்பியன் மொழிநூலில், கழக வெளியீட்டிலுள்ள படங்களையே சேர்த்துக்கொள்க. இயலுமாயின் எனதையும் சேர்த்துக்கொள்ளலாம். அது 1934-இல் பம்பாய் இந்தியப்பட விளக்கக் கிழமையிதழிகையில் (IIlustrated Weekly of India) வெளிவந்தது. அதன் படியொன்று வைத்திருந்தேன். எங்கோ தவறிவிட்டது. முழுகின் இலெமுரியா (Lost Lemuria) கிடைப் பின் அதிலுள்ளதையும் சேர்த்துக் கொள்க. இராமச்சந்திர தீட்சி தரின் Pre-Historic south India (சென்னைப் ப..க.க. வெளியீடு) என்னும் நூலிலும் ஒன்று உளது. அதையும் சேர்த்துக் கொள்ளின் நன்றே. ஞா. தேவநேயன்

கடிதம் : 4

ஆ 1135, 2ஆம் மேற்குக் குறுக்குச்சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மாவட்டம்

9-4-71.

பேரன்பரீர்,

வணக்கம். காசோலையும் பிறவும் ஒப்பியன் மொழிநூற் கட்டும் எடுத்துக்கொண்டேன். நன்றி. ஓ.மொ.சட்டை கவர்ச்சியாயிருக்கின்றது. 25ஆம்பக்கம் ‘வீழ்-to fall in love' என்று குறித்தது ஆராய்ச்சி முதிராத காலம். விள்-விழு-வீழ் என்பதே சரி விழு-விழை. அடுத்த பதிப்பில்தான் திருத்த வேண்டும். பன்னீர் ஓரைப் பெயர்களிலும் சிலவற்றை மாற்ற வேண்டும். (சொல் அல்லது வடிவு)