உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

140 ஆம் பக்கம் மேடம்-மேழம், இடபம் -விடை, இரட்டை- ஆடவை, கடகம் - அலவன், ஆளி - மடங்கல், தேள்-நளி. வில் - சிலை, மகரம் - சுறவம். இவற்றுள் வலப்பக்கமுள்ள சொற் களைத்தான் இன்று ஆள்கின்றேன்.

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை மதிப்புரையும் சேர்த்துக் கொள்வீர்களென்று எதிர்பார்த்தேன். அது அற்றைத் தமிழ்ப் பொழிலில் வெளிவந்தது.

பேரா. இராமச்சந்திர தீட்சிதரின் Pre-Historic South India விலுள்ள குமரிக்கண்டப் படமே நம் கொள்கைக்குப் பொருத்த மானது. அடுத்த பதிப்பில் அதையே இணைக்க பனிமலை ஒரு காலத்திற் கடற்குள்ளிருந்ததை அதுவே காட்டும்.

மே முதற்கிழமைதான் வால்பாறை செல்கின்றேன். அதற்கு முன்பே வேர்ச்சொற் கட்டுரை வந்துவிடும்.

மே 4ஆம் 5ஆம் பக்கல் பறம்பு மலையில் தவத்திரு குன்றக் குடி அடிகள் கொண்டாடும் பாரி விழாவில் எனக்குப் பாராட்டிருக்கின்றது. தமிழாசிரியரும் தமிழறிஞரும் பலர் வருவர். 23ஆம் பக்கல் தி.பா. புலியூர் சென்று மறுநாள் பெருஞ் சித்திரனாருடன் விழாவிற்குச் செல்லாமென்றிருக்கின்றேன்.

முன்பு தாங்கள் கூறியவாறு ஒரு சூழ்வு நடத்துவதாயின் Origin & Spread of the Tamils சில படிகளுடன் இங்கு வருக. செல்லும் வழியிற் பெருஞ்சித்திரனையும் சேர்த்துக் கொள்ளலாம். விழா முடிந்தபின் வால்பாறை செல்வேன்.

ஆரியர் இந்நாட்டிற்கே உரியவரென்றும், உலக முழுதும் பரவி நாகரிகத்தைப் புகுத்தினவரென்றும் சிந்துவெளி நாகரிகம் ஆரியரதேயென்றும் மேனாட்டார் நம்புமாறு ஆரிய தரங்கிணி யில் எழுதப்பட்டுள்ளது. சேது; தெ.பொ.மீ., மு.வ. முதலியோர் தாமும் தமிழைக காவாது என்னையுந் தடுத்துங் கெடுத்தும் வருவதை எண்ணிக் காண்க.

ஞா.தே.