உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

177

கடிதம் : 5

ஆ 1135, 2- ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மாவட்டம்,

1.7.71

பேரன்பரீர்,

வணக்கம். கீற்று (Skeat's) ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலி வாங்கியது பற்றி முந்தா நாள் விடுத்த அட்டையில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தேனே! அது கிடைக்கவில்லையா?

ஆங்கிலோ-சாகசன் (Anglo-Saxon) அகர முதலி வாங்க உறுதி யான கட்டளை உடனே கொடுத்துவிடுக.

வெபுசித்தர் (Webster)வியனுலக (Universal) அகர முதலியை (1871/2 உரூபா) வாங்குமாறு முந்தின அட்டையிலேயே எழுதி விட்டேன். பேரா.ம.வி. இராசேந்திரன் (எம்.ஏ.) எழுதிய நம் நாட்டுப் பாம்புகள் ஒன்றும் வேண்டும். நாம் வாங்கிய பிரி தானியக் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Britannica) 24 மடலங்களுள் இறுதியது பொருட்காட்டி (Index) அதுவே திணைப்படங்களும் (Maps) கொண்டது. அதில் இந்தியாப் படம் வர வேண்டிய மூவிடத்திலும், மற்ற நாடுகளை யெல்லாம் காட்டி இந்தியாவை மட்டும் கரிபூசினது போல் கருஞ்சாயம் பூசியுள்ளது. (Silhouetted) இது ஏன் என்று விளங்கவில்லை. இந்தியாவின் மீது பகை கொண்டிருக்கும் குழும்பும் அல்லது அரசும் இங்ஙனம் செய்யக்கூடாதே! அமெரிக்காவில் வெளி யிட்ட இக்கலைக் களஞ்சியத்தில் ஏன் இக்கடுங்குற்றம்? உடனே எருதந்துறைப் பல்கலைக் கழக அச்சகத்திற்கு (Oxford University Press) எழுதிக் கேட்க, கைத்தவறுதலாக அனுப்பியிருந்தால் இந்தியப்படமுள்ள மடலம் ஒன்று அனுப்பச் சொல்க. அஃதின்றேல் அதற்குரிய விலையைத் திருப்பச் சொல்க. இரண்டு மின்றேல் பொது மேடையில் அல்லது அரசு வாயிலாகக் கிளர்ச்சி செய்ய வேண்டும்.

ஞா. தேவநேயன்