உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கடிதம் : 6

பேரன்பரீர்,

ஆ 1135, 2 ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மா,

27.7.71

வணக்கம், பொத்தகக் கட்டு நேற்றுத்தான் வேலூர் வந்து சேர்ந்தது. என் மகன் உடனே எடுத்துவந்தான். அடுத்த மீ அவன் பணங்கொண்டு வருவான்.

வெபுசித்தர் அகரமுதலி வண்ணப் படங்களுடன் நன் றாகத்தான் இருக்கின்றது. விலை தகும்; பயனும் படும். ஆயின் எனக்கு வேண்டியவை படங்களிலும் சொற்களும் பொருள் விளக்கமுமே. சில அருஞ்சொற்கள் அதில் இல்லை. பொருள் விளக்கம் மிக்க குறைவு.

நான் திருச்சி ஈபர் மேற்காணியர் உயர்நிலைப் பள்ளியில் 1934 இல் பார்த்த வெபுசித்தர் ஆங்கில அகரமுதலி, இன்று வாங்கியதுபோல் இரு மடலம் (2 Vols) கொண்டது. அதிலுள்ளவை வண்ணமில்லாப் படங்களஞ்சியம் போன்றது. எடுத்துக்காட்டு : Beaver (நீர்நாய்) அதில் படத்துடன் ஒரு பக்கம் முழுவதும் வண்ணிக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி அறியக்கூடியவையெல்லாம் அதிலுள்ளன. இன்று வாங்கியதில் ஓரிருவரியே உள்ளன.

விலையுயர்ந்த விரிவாயிருக்குமென்று கருதினேன். ஏமாற்ற மடைந்தேன். விலை குறைந்த இன்னோர் அகரமுதலி வெபுசித்தர் இயற்றியது இருமடலமா, நான் சொன்னவாறு பொருள் விளக்கமுள்ளதாவென்று கண்டு அல்லது கேட்டுப் பார்க்க. இரு நிலைமையுருப்பின், உடனே வாங்கிவிடுக. விலையை முன்பணமாக வேண்டுமாயினும் அனுப்பி விடுகிறேன்.

கூட

ரு மடலத்தையும் ஒரு பெரு மடலமாகக் இன்று வெளியிட்டிருக்கலாம். அதை வினவியறிக. ஆங்கிலப் பேராசிரியர் அண்மையில் இருப்பினும் கேட்டறிக. பொருள் விளக்கம்தான் நற்சான்று. படமும் அதில் மிக விளக்கமானதே. இதில் ஒரு நீர்நாய்ப்படம் மட்டும் உள்ளது. அதில் நீர்நாய்கள் ஒரு நீர்நிலையின் குறுக்கே அணைக்கட்டித் தமக்கு உறையுள் அமைக்கும் படம் தெளிவாக உள்ளது. எழுத்தும் சற்றுச் சிறிதாக இருந்ததாக நினைவிருக்கின்றது.

ஞா. தேவநேயன்.