உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

தாங்கள் ஆகிய நால்வரும் பர். சுந்தரவடிவேலனாரைக் கண்டு பல்கலைக் கழகத்திலுள்ள முத்தொகுதிகளுள் ஒன்றை நான் திருத்தி வெளியிடுமாறு விலைக்குக் கொடுக்கக் கேட்க வேண்டும்.

எமக்கின்று சம்பள வருவாயின்மையால் இனி நான் எழுதுபவற்றையெல்லாம் நானே வெளியிட்டால்தான் எனக்குக் கட்டும். எனக்குச் சொந்த வீடின்மை கவலைக்கிடமானது. ஞா. தேவநேயன்.

கடிதம் : 8 : 8

ஆ 1135, 2ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மா.,

13-5-72.

பேரன்பரீர்,

வணக்கம்,

தங்கள் அஞ்சலட்டை வந்தது. அடிகள் நூல் நிலையத்திற்குத் தமிழர் வரலாறு அன்பளிப்புப்படி ஒன்றெடுத்துக்கொள்க. சு.கு. அருணாசலம் சென்ற மீ சேலத்தில் இறந்துபோனான்.

இன்று தாங்கள் எனக்கு ஓர் அரும் பேருதவி செய்ய வேண்டும். நான் குடியிருக்கும் வீட்டுக்காரர் வீட்டை விற்கப் போகின்றார். வீட்டை வாங்குபவர் உடனே என்னை வெளி யேற்றுவார். அல்லது 65 உரூபா வாடகையை 80 இலிருந்து 100 வரை உயர்த்துவார். வாடகையை உயர்த்துவதிலும் வெளி யேற்றுவது துன்பந்தரும். இத்தகைய வீடு இங்கு வேறில்லை. சென்னையில் 300 உரூபாவிற்குக் குறைந்து கிடையாது.

ஆதலால், இதுவரை நான் எழுதிய பொத்தகங்களின் உரிமை முழுவதையும் விற்று இவ்வீட்டை விலைக்கு வாங்க விரும்புகிறேன். வாங்கின் ஓரறையிற் செந்தண நிலைப்பாடு (Air- conditioned) அமைத்துக் கொள்ளலாம்; மேற் கட்டிடமும்

கட்டிக்கொள்ளலாம்.

தங்கள் வார வெளியீடாக உள்ளனவும் என் சொந்த வெளியீடாக வுள்ளனவும் ஆகியவற்றுடன், வேர்ச்சொற் கட்டுரைகளும் சேர்த்துக் கொள்க. வேனில் கழிந்தவுடன்