உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

181

இன்னும் பத்துக் கட்டுரைகள் எழுதித் தருவேன். பழமொழித் திரட்டும் விற்பேன்.

இவற்றிற் கெல்லாம் நேர்மையான ஒரு விலை தருக. என் நூல்களை வாங்குவது தமிழுக்குச் செய்யும் தலைத்திறத் தொண்டனெனக் கருதுக. திருக்குறளுரை திருத்தமும் விரிவும் பெறும். ஒரு கிழமைக்குள் நன்மறுமொழி எதிர்பார்க்கின்றேன். எல்லாநூல்களையும் வாங்க இயலாவிடின் வீடுவாங்குந் தொகையளவிற்கு வாங்குக. அது முப்பதினாயிரத்திற்குக் குறையாதிருக்கும்.

பேரன்பரீர்,

கடிதம் : 9

ஞா. தேவநேயன்.

ஆ 1135, 2ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மாவட்டம்,

23-5-'72.

வணக்கம், தமிழே திரவிடத்தின் தாயும் ஆரியத்தின் மூலமும் என்னும் உண்மையை உலகறிய நாட்டற்கு வேண்டிய வாறெல்லாம் என்னைத் தகுதிப்படுத்தி வருகின்றேன். இன்னும் ஐந்தாண்டிற்குள் அது நிறைவேறிவிடும் என்பது என் நம்பிக்கை.

ப்பொருள்பற்றிய வரலாற்று நூல்கள் வெளிவரும்

போதெல்லாம் ஒவ்வொருபடி எனக்கு வாங்கி வைக்க.

1.

2.

3.

4.

5.

6.

A social history of the Tamils (சென்னைப் ப.க.க. வெளியீடு)

The Art of Tamil Nadu (அறநிலையப் பாதுகாப்பு மன்ற வெளியீடு) Inscriptions of Kanyakumari District (அறநிலையப் பாதுகாப்பு மன்ற வெளியீடு)

The Tamil Kingdoms of South India (K.A. நீலகண்ட சாத்திரி) History of India -3 Parts (K.A.நீலகண்ட சாத்திரி)

A Comprehendive Hostory of India 2 vols (K.A. நீலகண்ட சாத்திரி) சூலை 8,9, காரி ஞாயிறு சேலத்தில் நடைபெறும் உ.த.க. தமிழ் விடுதலை மாநாட்டில் பதிப்புத் துறைப் பட்டறிவு பற்றியும் செல்வியும் சிறந்த நூல்களும் வாங்குவதுபற்றியும் தாங்கள் சொற்பொழிவாற்றலாம். புலவர் சின்னாண்டார் இதுபற்றி

எழுதுவார். இசைந்துவிடுக.