உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

மறைமலையடிகள் நூல்களெல்லாம் என்னிடமிருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். என்னிடமில்லாதவை பத்திற்கு மேற்படா. அவற்றை அன்பளிப்பாகவாவது (அஃதியலாக்கால்) அரைவிலைக்காவது தர ஏற்பாடு செய்க.

சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் சேலம் தமிழ் விடுதலை மாநாட்டில் தலைமை தாங்கித் தமிழுக்கு வடமொழி தேவையில்லையென்று பேசமுடியுமா? முடியுமெனின் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, வடமொழி வரலாறு ஒவ்வொருபடி அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

கடிதம் : 10

ஞா. தேவநேயன்.

ஆ 1135. 2ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு வ.ஆ.மாவட்டம்,

29-7-'72

பேரன்பரீர்,

வணக்கம். செல்விக் கட்டுரை இன்று பதிவஞ்சலில் விடுக்கப் பட்டுள்ளது.

அன்பளிப்புத் தொகையை முன்போல் இங்கேயே விடுக்க. இனிமேல், நாம் காலம் தாழ்க்காது நம் போராட்டத்தைத் தொடங்கவேண்டும். என் காலத்தில் தமிழ் விடுதலையடையா விடின். இனி ஒரு காலும் அடையாதென்பது திண்ணம்.

தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை யாக நாம் நாட்ட வேண்டிய உண்மை, தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே.

தமிழர் நண்ணிலக் கடற்கரை நாட்டிலிருந்து வந்தவர் என்பதே இன்று மேனாட்டில் வேரூன்றியுள்ளது. அதனால் தமிழின், தொன்மை முன்மை தாய்மை தலைமை ஆகியவற்றை மேலையர் உணரும் நிலைமையில் இல்லை. தெ.பொ.மீ. வெளிப் படையாகவும், மு.வ. மறைமுகமாகவும் இக் கொள்கையைத் தாங்குகின்றனர். குமரிநாட்டுக் கொள்கையை ஒப்புக் கொள்ளின் ஆரிய மேம்பாட்டுக் கொள்கை நிலைக்காதென்பதை நன்கறிந்தே, நீலகண்ட சாத்திரி அதை விடாப் பிடியாய் மறுத்து வருகின்றார். தனிநாயகம் உலகச் சுற்றுலா மாநாடுகளும் தமிழ்ப்