உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

183

பகைவரையே தலைமையாகக் கொண்டு நடைபெ றுவதால் தமிழின் நிலைமை வரவரக் கேடாகியுள்ளது. இதை அடியோ டொழித்தற்கு வருகின்ற திசம்பர் இறுதி, சென்னையில், தமிழ் வரலாற்றுப் பட்டிமண்டபம் நிகழ்த்த வேண்டும்.

'தமிழர் பழங்குடி மக்களா? வந்தேறிகளா?” என்பதே தருக்கப்பொருள்.

நான் குமரிநாட்டு மக்கள் என்று ஒருமணி நேரம் பேசு வேன். நீலகண்ட சாத்திரியார், தெ.பொ.மீ., கி.வா. செகநாதன் ஆகிய மூவர் அல்லது அவரால் ஏவப்பட்டோர் எதிர்க்க வேண்டும்.

திரு குன்றக்குடியடிகள், பர். மணவாளராமானுசம், கருமுத்து தியாகராசச் செட்டியார், செட்டிநாட்டரசர், கோவை கோ.து.நாயுடு, ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, நீ. கந்தசாமிப் பிள்ளை ஆகிய எழுவரும் நடுவர். அவர் தீர்ப்பே முடிபு. அதனை, அரசும், பல்கலைக் கழகங்களும் உலகும் ஏற்கவேண்டும். செலவு முழுதும் உத.க. ஏற்கும். தாங்கள் ஏற்பாடு மட்டும் செய்யவேண்டும். உடன் மறுமொழி விடுக்க.

கடிதம் : 11

ஞா. தேவநேயன்.

ஞா தேவநேயன்

மொழிநூற் பேராசிரியன்

பேரன்பீர்,

வணக்கம்,

இடம்: காட்டுப்பாடி விரிவு,

பக்கல்: 25-10- '73.

கீழைத்திருப் பொத்தகத் தொடர் வாங்கித் தருமாறு நான் தங்கட்கெழுதி இருமாதத்திற்கு மேலாகின்றது. தாங்கள் அதற்கு எழுதுவதாகச் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகின்றது. ன்னும் அதுபற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை.

மறைமலையடிகளின் குறிக்கோள், தமிழைப் பிறமொழிச் சொற்கலப்பின்றி முழுத் தூய்மையாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்பதே. அதை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். அதனாற் பெரும்பயன் விளையாது. சமற்கிருதம் தேவமொழி என்று திருக்கோயில் வழிபாட்டு மொழியாக இருக்கும்வரை தமிழுக்கு வளர்ச்சியோ முன்னேற்றமோ இராது.