உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

என் குறிக்கோள் தமிழைத் திரவிடத் தாயாகவும் ஆரியத் தின் மூலமாகவும் உலகறிய நாட்டி அதை வடமொழிப் பிணிப் பினின்று அடியோடு மீட்பதே. அதற்காகவே அரை நூற்றாண்டு அரும்பாடு பட்டு ஆய்ந்தேன்.

என் எண்ணம் நிறைவேறற்கு The Limurian Language and its Ramifications என்ற நூல் வெளியீடு இன்றியமையாதது. அதற்குக் கீழைத் திருப்பொத்தகத் தொடரும் கருவிநூலாகும்.

ப்

என் மூப்பு மிகுந்து வருவதாலும் எனக்குப்பின் இப் போராட்டத்தை ஏற்றுநடத்த ஒருவருமின்மையாலும் என் முயற்சியின் முதன்மையையும் இன்றியமையாமையும் உணர்ந்து அதற்கேற்ப, முனைந்து விரைந்து வினை செய்க.

ஞா. தேவநேயன்.

கடிதம் : 12 *

எசு.பி.57, க.க. நகர், சென்னை 71, 2011, சிலை 14 (2-1- '81)

அருந்தமிழ்ப் புலவீர்,

நலம். நலமாக.

என் வண் டி யில் இ

மின்மையால் எம் கடைநிலை யூழியன் சண்முகம் வேறொரு வண்டியில் முந்திப் புறப்பட்டு வருகின்றான்.

நான் இன்று மாலை 9-30 மணி விரைவான் ஏறி நாளைக் காலை வந்து சேர்வேன். வண்டி வரும் நேரம் வினவி யறிந்து சந்திப்பு நிலையத்திற் காத்திருக்க.

எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தங்கறை ‘அரிமா’ உண்டிச் சாலை (ஹோட்டல்) III

111

பொத்தகக் கட்டுகள் நான்கும் (3+1) இதற்குள் வந்திருக்கும்.

உங்கள் அகர முதலிப்பணி அமர்த்தம்பற்றி முதலமைச்சர் சில வினாக்களை எழுப்பியிருக்கின்றார். நான் வரும்போது அதுபற்றிய அரசோலையைக் கொணர்வேன். அதற்கு விரைந்து விடையிறுத்தல் வேண்டும்.

அரிமா வுண்டிச்சாைைல தமிழனதா? ஆரியனதா?

மாநாட்டு மண்டபத் தருகில் நம் பொத்தகங்களை விற்க இடமுண்டா?