உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் மடல்கள்

தொகுப்பாளர் தொகையுரை

பாவாணர் மடல்கள் என்னும் இத்தொகுப்பில் பாவாணர் வரைந்த 586 கடிதங்களின் பகுதிகள் இடம்பெற்றுள. அவர்தம் கடிதங்களைத் தொகுத்துப் ‘பாவாணர் கடிதங்கள்' என வெளிப் படுத்திய பின்னர்க் கிடைத்த கடிதங்களின் தொகுப்பாகும் இது. ன்னும் அன்பர்களிடம் பன்னூறு கடிதங்கள் உள. தேடி வந்து தருவாரும், தேடிச்சென்றும் தாராருமாக இருவேறு திறப்பொதுநிலை உலகியலைக் கண்டறிந்த பட்டறிவால்,. தொகுக்கப் பட்ட அளவிலேனும் தமிழ் கூறும் உலகப் பொருளாதல் வேண்டும் என்னும் ஆர்வத்தால் இத்தொகுப்பு வெளிப்படுகின்றது. முன்னே கடிதப் பெயர் பெற்றமையால், த்தொகுப்பு மடலாயிற்று. வேறு காரணம் இல்லை.

காடும் கவினுடையதேனும், காவும் தோப்பும்ஓர் ஒழுங் குற்ற அழகும், திட்டமிட்ட அமைப்பும் கொண்டிருத்தல் கண்கூடு. ஆதலால், இம்மடல்களைக் கால அடைவு ஒன்று மட்டுமே கருதாமல் பொருள்வகை அடைவுசெய்து, அதன் மேல் கால அடைவும் செய்யப்பட்டுள்ளதாம். சில இடங்களில் கால அடைவு சிறிது மாறவும் கூடும். பொருளடைவுப் பொருத் தம் அங்குக் காட்டுவதற்கு இடமாக இருந்திருக்கலாம்

ம்மடல்கள் பத்துத் தலைப்புகளில் பகுத்துத் தரப் பட்டுள. ஆய்வாளர் பயனுக்கு இத்தலைப்புப் பகுப்பு உதவியாக ருக்கும் என்பது ஒருதலை.

‘தம்மை ஏமாற்றுதலையும் படிப்பினையாகக் கொள்ளல்’. விற்பனையில் வரும் பணத்தையும் நன்கொடைப் பணமென மகிழ்தல், மறைமலையடிகளைத் தெய்வமாகக் கருதுதல், தம் சிறுதொகையையும் தமிழ்ப் பணமாகக் கருதுதல், தம் பிறப்பு நோக்கம் கூறுதல், கோடி கொடுப்பினும் கொள்கை விடாதவர் என்னும் பெருமிதம் உரைத்தல், பட்டத்தால் பயனின்மை சுட்டல், நன்றியறிதல், இறைநலம் போற்றல், பணியால் அடையும்