உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

இன்பம் இன்னவற்றை முதற் பகுதியில் உள்ள கடிதங்கள் வழியே அறியலாம்.

உடலும் உள்ளமும் எனப்படும் இரண்டாம் பகுதியில் உயிர்வாழ்வின் சிறப்பு, கண்ணறுவை, ஈளைநோய் இவற்றின் நிலை, வாழைப்பழ ஆய்வு, அரத்தக் கொதிப்பால் மயக்கம், வெப்பக்கொடுமை, இன்னவும் பிறவும் இடம் பெற்றுள.

மூன்றாம் பகுதி, அன்பும் நண்பும் பற்றியது. தமிழ்ப் பற்றுள்ளார் பொறுப்பில் கழகம் இருத்தல், உண்மைத் தமிழரின்மையால் நேரும்கேடு, உண்மை நண்பின் உயர்வு, தமிழ்ப்பகைவரை நம்புதலின் தீமை, திராவிடராட்சி - தமிழராட்சி வேற்றுமை, இதனைச் செய்தற்கு இவரே உரியர் என்னும் தெளிவு, கட்சிப்பற்றும் மொழிப்பற்றும் இணையாமை, எவர் செலவிடினும் செலவு செலவே என்னும் பொதுமை யுணர்வு, மொழித்துறையை மதத்துறையினின்று பிரிக்க வேண்டாமை, தக்க நூல்களை விற்றாலும் தமிழ்த்தொண் டனல், நற்பெண்ணின் தகவு, சில வெளியீடுகளின் இற்றைத் தேவை. தேவையுடையோர்க்கு உதவுதல், எழுத்து வடிவமாற்றக் கருத்து, சில பெருமக்கள் சிறப்பியல் ஆகியவை இப்பகுதியால் அறியப்படுகின்றன.

நான்காம் பகுதி ஆய்வும் அறிவுறுத்தலும். ஆய்த ஒலியைப் பயன்படுத்து முறை, தமித்தமிழ்க் கழகம், கட்சிச் சார்பின்மை, மேற்கோளுரிமை, அரசின் தமிழ்ப்புறக்கணிப்பு. ஆட்சியின் முறை, வாழ்க்கைத் துணையியல், பாவூர் கணியன், தமிழ்ப் புலவருள் சிலரியல், மணமக்கள் பெயரையும் பிரியாமை, ஆட்சித் தவறுகள், பெயர் மாற்றத்திருநாள், அகர முதலித் திருத்தம், உண்மைத் தமிழர், பொதுவுடைமை, கரணவியல், அதிகாரப் பயன், கட்சியிணைப்பு, நக்கீரர் நாள் இன்னன பற்றிக் கருத்து விளக்கம் தருகின்றது இது.

ஐந்தாம் பகுதி உலகத் தமிழ்க் கழகமும் பணியும். கழகத்தின் கட்சிச் சார்பின்மை, தலைவர்கள் நிலை, உறுப்பினர்தகுதி, உ.த.க. கொடி, மாநாடு, தமிழரைப் பற்றிய பட்டிமன்றம், செனகல் தலைவர், ஆட்சிக்குழு, பொறுப்பாளர், செயற்குழு ஆகியவை பற்றிய விளக்கங்களைக் கொண்டது இது.

ஆறாம் பகுதி அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் என்பது. அமைப்பு விதிகள், சில நிகழ்ச்சிகள், திரு.வி.க. படிமை நிறுவல், உலகத் தமிழ்மாநாட்டுப் பங்கு பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள.