உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

1. வாழ்வும் வரலாறும்

மதுரைக்குழு

என் வாழ்க்கை முட்டின்றி நடைபெறும் வகை மாதம் 200 உருபா வட்டி வருமாறு ஒரு பெருந்தொகை தொகுக்க வேண்டுமென்பது மதுரைக்குழுவார் மடிபு. அதனாலேயே காலந்தாழ்ப்பு. தென்மொழிப்பணம் ஒரு நூலுக்குத்தான் ஓரளவு உதவும், அது குறையாது வந்ததும் மதுரைக் குழுவால்தான்.

படிப்பினை

-20.7. '64

பெரு.

று

நால்வரும் 500 படிகளை விற்றுத் தருகிறோம் என்று பன்முறை உறுதி கூறிக் கேட்டதினால்தான் விடுத்தேன். அதை நிறைவேற்றாவிடின் எனக்கு நல்ல படிப்பினையாகும்.

ஏமாற்று

-வி.அ.க. 24.1.68

க்காலத்தில் எல்லாரையும் நம்பக்கூடாது. பொத்தகம் விற்றுக் தருகிறோமென்று என்னை ஏமாற்றிய புலவரும் பலர். துறவியர் சிலரு முண்டு.

-26 அலவன் 1999.

-கா.இ.மு.

விற்பனையும் நன்கொடையே

உரூபா தக்க சமையத்தில் வந்து சேர்ந்தது. நன்றி. என் பொத்தகங்களை வாங்குவார்அரியர், ஆதலால் இதை நன் கொடையாகவே நெஞ்சாரக் கருதுகின்றேன்.

-23 விடை 2000

-மி.மு.சி.