உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

193

ஒருகிழமை

நாளைநின்று திங்கட்கிழமை (11.5.70) பிருந்தாவனம் ஏறி அங்கு வருகின்றேன். புகைவண்டி நிலையத்திற்கு இயங்கி அனுப்பிவைக்க. ஒரு கிழமை அங்கிருப்பேன். முன்பு கண் மருத்துவக் காலத்திற் செய்ததுபோன்றே ஈரறுகாலிகளை (Benches) இணைத்துப் படுக்கை கட்டிலாக அமைத்து வைக்க.

-9-5-70.

-வ.சு.

பிறந்தநாள் மலர்

என்பிறந்த நாள் மலர் வெளியிடவேண்டாமென்று சொன்னேன். பேராசிரியர் கேட்கவில்லை. அதற்குச் செலவிட்ட பணம் எதிலிருந்தெடுத்ததோ தெரிந்திலது. நூல்வெளியீட்டுப் பணத்தை வேறு செலவிற்குப் பயன்படுத்தக்கூடாதென்று சொல்லியிருக்கின்றேன். 'மே' 4 ஆம் 5-ஆம் பக்கல் பறம்பு மலைப் பாரிவிழாவில் எனக்குப் பாராட்டிருக்கின்றது. தவத்திருக் குன்றக்குடி அடிகள் அழைத்திருக்கின்றார்கள். தாங்கள் வர இயலின் வருவது நன்று. 24 மீனம் 2002 நா.செ.கி.

இருத்தல்

என் மூத்த மகனும் அவன் பிள்ளைகளும் வந்திருப்பதால் ம்மாத இறுதி வரையில் நான் இங்கு இருக்க வேண்டியுள்ளது. அதன்பின், நீர்வரவேண்டிய நாளைத் தெரிவிப்பேன். நும் அருமைப் பெற்றோர்க்கு என் நலவினவலைத் தெரிவிக்க.

-18.5.70

மறை.நி.

வைப்பகக் கணக்கு

அடுத்த கிழமை விடுக்கும் காசோலையுள்ளிட்ட உறையை என்மகன் மணிபெயருக்கே விடுத்துவிடுக. அவன் காசோலையை என் வைப்பகக் கணக்கிற் சேர்ப்பித்து விடுவான்.

-25.5.70

ந.பி.