உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வாடகை விடு

குடியிருப்பது வாடகைவீடு. வீட்டுக்காரர் எந்த நேரத்தி லும் ஒருமாத அறிவிப்பு கொடுத்து வெளியேறச் சொல்லலாம். இக் கவலை ஒருபக்கம் அழுத்தி கொண்டுதானிருக்கிறது.

4.11.70

தி.வை.

உணவுக்குறை

இயற்கைக் கண்ணொளி குன்றியுள்ளது. உண்மைதான், ஆயின் செயற்கைக் கண்ணொளி இன்றுள்ளது. என்வேலைக்குப் போதும். மேலும், எனக்கேற்ற பணியும் நல்லசம்பளமும் கிடைப்பின் மகிழ்ச்சியாலும் நல்லுணர்வினாலும் உடல்நலமும் உறுப்பாற்றலும் மிகுமென்றே கருதுகின்றேன். அண்மையில் எனக்கு வந்த கிறுகிறுப்பிற்கும் உணவுக்குறைவே அடிப்படைக் கரணியம்.

தி.வை.

7.11.70

மேடை

இருபுறமும் இழுவையும் பூட்டுமாடமுமுள்ள இருப்பு நிலை மேடை (காடிரசு, godraj) போன்றது. அங்குக் கோவையில் இருப்பின் தெரிவிக்க, என்னிடமுள்ளது வலப்புறத்தில் மட்டும் இழுவையும் மாடமும் கொண்டது.

அடிகள்

17.8.71

மறை.நி.

அடிகள்

அடிகளை ஒரு தெய்வமாகக் கருதவேண்டும் வேலையையே நான் செய்து வருகின்றேன். என் மூப்பு மிகுகின்றது. என் வாழ்நாட்குள் தமிழை வடமொழியினின்று மீட்க வேண்டும்.

3.11.71.

ப.கு.மு.