உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

தமிழ்ப்பணம்

195

என்னிடமுள்ள சிறுதொகை, தமிழ்ப்பணம், அதையும்

தந்தேன்

4.11.71.

கா.இ.

முன்தோன்றலர் மூவர்

மறைமலையடிகளும் யானும் ஒரு தனிவகையரே. எம் வாழ்வைத் தமிழ் வாழ்வொடு ஒன்றுவித்துக் கொண்டேம். தமிழை வடமொழியினின்று மீட்கவே இறைவனாற் படைக்கப் பட்டேம். தமிழ் -ஆரியப் போராட்டத்திற்கு ஆங்கில அறிஞர் ஒருவரும், பிராமணர் ஒருவரும், சிவநெறியார் ஒருவருமாக மூவர் எனக்குமுன் தோன்றினர். மேலையர்க் கறிவிக்க நான் ஏற்பட்டுள்ளேன். என்னோடு இப்போராட்டம் முடிகின்றது. இத்தகைய போராட்டம் உங்கட்கில்லை.

ம்

பேராட்டத்திற்குச் சில கருவிகள் தேவை. அவற்றுள் மூன்று தமிழர் வரலாறு, தமிழர் மதம். A Guide to westren Tamil obagists என்பன. இவை இன்ன இன்ன காலத்திற்குள் வர வேண்டுமென்று வரம்பிட்டுள்ளேன்.

-4.11.71.

இ.

-கா.இ

தொகுப்பாளன் குறிப்பு : (ஆங்கில அறிஞர் கால்டுவெல்; பிராமணர் பரிதிமாற்கலைஞர்; சிவநெறியர் மறைமலையடிகள்) என் வரலாற்றுக் குறிப்பு

ஞா. தேவநேயனார் நெல்லைமாவட்டத்தில் 7.2. 1902 அன்று கணக்காயனார் ஞானமுத்தனார்க்கு மகனாகப் பிறந்தவர். பாளையங்கோட்டையில் C.M.S. என்னும் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் கல்விபயின்றபின், மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு தேறித்தனிக் கல்வியால் சென்னைப் பல்கலைக்கழக முதுகலைப்பட்டமும் பெற்று, பல உயர்நிலைப்பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகவும் சேலம் நகராட்சிக் கல்லூரியிற்றமிழ்ப் பேராசிரியராகவும் அண்ணா மலைப்பல்கலைக் கழகத்தில் திரவிடமொழியாராய்ச்சித் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

1922 இல் தமிழாசிரியப்பணி ஏற்றத்தில் இருந்து மொழி நூல், வரலாற்று நூல், மாந்தநூல் ஆகிய முந்நூல் அடிப்