உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

197

என் சொந்த நூலகத்தைக் கொண்டே பணி நடந்து வருகின்றது. சம்பளத்திற் பாதி பொத்தகத்திற்குச் செலவாகிறது. தற்கே ஒரு பெருந்தொகை வழங்கலாம்.

இறைவனருளால் இறுதிவரைபணிதொடர்ந்தாற்போதும்.

சு.பொ.

5.1.79.

உதவி

ஒரு சிற்றளவான குடியிருப்புப் பகுதிக்கே அறுபதினாயிரம் செல்லும். என்னிடம் நாற்பதினாயிரம்தான் உள்ளது. அதன்பின் நூலகம் கட்ட இருபதினாயிரம் வேண்டும். அதன்பின் செந்தண நிலைப்பாட்டிற்கு (Air condition) ஐயாயிரம் வேண்டும். விலையு யர்ந்த அரும்பெரு நூல்களெல்லாம் பாதுகாப்பின்றியுள்ளன.

என் வாழ்க்கையில் இதுவரை வீடுகட்ட இயலவில்லை. திரு.கருணாநிதியார் உதவியால் பதின்மூவாயிரத்திற்கு மனை நிலம் வாங்கவும் நாற்பதினாயிரம் வைப்பகத்தில் இட்டு வைக்கவும் இயன்றுள்ளது. எனக்குச் சொந்த வீடிருந்தால் வேனிதல் உட்பட ஆண்டு முழுதும் இருமடங்கு வேலை செய்ய லாம். எனக்கு மூப்பும் மிகுந்து வருகின்றது.

கு.பூ.

உதவி

கலைஞர் கருணாநிதியின் உதவியால் (என்பதவியால்) ங்குப் பதின்மூவாயிரம் உருபாவிற்கு ஒரு நிலம் வாங்க முடிந் தது. இன்று வீடு கட்டத் தொடங்கியிருக்கிறேன். நூலகமல்லாது குடியிருக்கும் வீட்டிற்கு மட்டும் அறுபதினாயிரம் செல்லும். நாற்பதினாயிரம் தான் உள்ளது. பொத்தகப் பணம் விரைந்து வரின் பேருதவியாயிருக்கும் . பின் வரவுப் பொத்தகங்களும் விரைந்து விலையாயின் அத்தொகையையும் சேர்த்தனுப்பலாம். நாட் செல்லுமாயின் முன்வரவுப் பொத்தகப் பணத்தை மட்டும் முன்விடுக்க.

எப்போதும் இந்தியன் வைப்பக (Indian Bank) வரை யோலை (Draft) யாகவே பதிவஞ்சலில் விடுக்க. பதிவஞ்சல் செலவு எனதே.

4.10.79

கு.பூ