உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

என்தொண்டு

என் தமிழிலக்கியத் தொண்டில் தலைமையானது

செ.சொ. அகரமுதலி.

தமிழ்க்காப்புத் தொண்டில் தலைமையானது The L.L. of its Rd

கு.பூ. 9.10.79

தமிழை வடமொழியினின்று மீட்பதே என்வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் பிராமணியத்திலிருந்து முழு விடுதலை யடைவதே அதன் பயன். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பட்டயங்களுள் ஒன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி. அதை வலியுறுத்துவன இந்தியெதிர்ப்பு நூலென்றும், வடமொழி யெதிர்ப்பு நூலொன்றுமான ஈராவணச் சான்றுகள் இரு ஆவணம்). அச்சான்றுகளே அகர முதலியை மெய்ப்பிக்கும் அவையின்றேல் ஆரியர் வையாபுரிகளைத் துணைக்கொண்டு அகரமுதலியை அறிவியல் முறைப்பட்டதன்று என்று எளிதாய்த் தள்ளிவிடுவர். அவ்விரண்டும் ஆங்கிலநூல். இனிமேல் வெளி வரும்.

செந்தமிழ்ப் செல்வியை இதுவரை வாங்காவிடில் இனிமே லாயினும் வாங்கிப் படிக்க.

அகரமுதலி இன்னும் எட்டாண்டிற்குள் முடிந்துவிடும். இதற்கென்றே இறைவன் என்னைப் பிறப்பித்திருக்கிறான். இதை வேறெவரும் உருவாக்கவும் இயலாது.

நாளும் பத்துமணி வேலை

அ.வா; வெ.செ. 16.4.80

வீடு கட்டும் வேலை தொடங்கி ஆறுமாதமாகின்றது. இருமுறைகள்தான் போய்ப் பார்த்தேன். எல்லாவற்றையும் என் நண்பரும் மகனும் பேரனும் அலுவலக ஏவலனுமே கவனித்து வருகின்றனர். நான் போய்ப் பார்ப்பதில்லையென்ற ஒருகுறை கூறப்படுகிறது. இந்நிலையில் நான் முழுநேரத்தையும் வீடு கட்டுவதில் செலவழிக்கிறேன் என்று ஒரு தமிழ்ப் பகைவனோ கயவனோ உங்களிடம் சொல்லியிருப்பது மிக வியப்பானதே. அவனை உடனே தெரிவிக்க. மறைவாய் வைத்துக்கொள்கிறேன். இன்றேல் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சரிடமும் சொல்ல