உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

199

நேரும். மறைமலையடிகளார் மீதும் திருவள்ளுவர் மீதும் குற்றஞ்சாட்டுவாரும் உளர்.

நான் எழுநாளும், பத்து மணிநேர வேலைக்காரன். வேனில் மும்மாதம் வேலை குன்றுகின்றது. சொந்தவீட்டில் செந்தண (Air-conditioned) அறை அமைத்துக்கொண்டு முழுப்பகலும் வேலை செய்வேன். இது எனக்கு இன்பமானது.

இறைவன் செயல்

அ.வா; வெ.செ. 16.4.80

திருவள்ளுவர், பிராமணர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தித் தமிழ் நாகரிக உயர்வை நாட்டினார். மறைமலையடிகள் தமிழ் தனிமொழியென்று காட்டினார். பெரியார் கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சியூட்டினார். நான் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிராமணியப் பேயைத் தமிழ் நாட்டினின்று ஓட்டுவேன். இதற்கு றைவனே என்னைத் தோற்றுவித்திருக்கிறேன். இது என் செயலன்று. இறைவன் செயலே.

அ.வா; வெ.செ. 2.5.80

தொண்டின் பெருமை சாருமிடம்

நான் எல்லாவகையிலும் மிக எளியவன். இறைவன் திரு வருளின்றித் தமிழ் வேர்ச்சொல் காணும் திறமையை நான் பெற்றிருக்கவே முடியாது. ஆதலால் என் தொண்டின் பெருமை யெல்லாம் இறைவனையே சாரும்.

கரும்பு தின்னக் கூலி

அ.வா.வெ.செ. 2.5.80

மொழிநூற்கல்வியும் ஆராய்ச்சியும் எனக்கு இன்பமான பாடத்துறை. அதனால், இன்று நான் பெருஞ்சம்பளம் கரும்பு தின்னக் கூலியாகும். ஆதலால், வேலை செய்யாது காலத்தைக் கழிக்கவோ வேறு வேலை செய்யவோ இயலவே இயலாது.

அ.வா; வெ.செ. 2.5.80