உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

2. உடலும் உள்ளதும்

ஈளைநோய்

திரு. முனிசாமி விரும்பியவாறு சனுவரியில் (மலாயா) போக முடியாது. என்னை ஈளை நோய் தாக்கியுள்ளது. பனிக் காலம் முடிந்தால்தான் போகமுடியும். அன்று அழைப்பில்லை யெனின் அடுத்த ஆண்டுதான். பொருளாசைப்பட்டு உயிரை இழப்பின் என்ன பயன்?

குரு

வி.அ.க. 5.12.64

குருபற்பொடி நெடுஞ்சிமிழ் நான்கும் வாங்கி வைக்க. குரு எண்ணெயும் (தைலம்) வேண்டும்.

கோபி

ந.பி. 1 ஆடவை 2000

கோபியில் என் மூத்த மகன் ஆசிரியவேலை பார்க்கிறான். கண்ணறுவைக்குப் பின் கண்ணாடியணிந்து கொண்டுதான்

அங்குச் செல்லவேண்டும்.

ந.பி. 1 ஆடவை 2000

உரிமைத் தொடர்பு

தென்மொழிக்கும் எனக்கும் உரிமை வகையில் தொடர் பில்லை. பல செய்திகளில் எனக்கும் பெருஞ்சித்திரனுக்கும் கருத்து வேறுபாடுண்டு. ஆதலால் தென்மொழியிலும், தமிழ்ச் சிட்டிலும் வெளிவந்தவற்றிற்கு யான் பொறுப்பாளியல்லேன்.

என்

கண் மருத்துவம்

கா.இ.மு. 10 அலவன் 2000

கண் மருத்துவம் பற்றியும், திருக்குறள் தமிழ் மரபுரை அச்சீடு பற்றியும் இங்குவந்து என் மகள் வீட்டில் தங்கியிருக்கின்றேன். சிலை 5 வரை இங்குத் தானிருப்பேன்.