உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

201

இயற்கைக்கண்

எனக்குக் கண்மருத்துவம் சிலை 2 ஆம் பக்கலொடு முடி கின்றது. அதன்பின் கண்ணறுவையர் குறித்தவாறு கண்ணாடி உருவாக்குவித்து அணிந்து கொண்டு காட்டுப்பாடி செல்ல வேண்டும். கண் நன்றாக இருப்பதாக அறுவையர் சொன்னார். ஆயினும் பழைய இயற்கைக் கண் போயே போய்விட்டது. கா.இ.மு. 28 நளி 2000

படலம் வளர்தல்

என்

வலக்கண் படலம் படலம் வளர்ந்து வளர்ந்து வருவதால் வரவர ஒளிகுன்றி வருகின்றது. வலக்கண் முற்றும் இருண்டுவிடும். அதன்பின் திருத்தவேலை செய்யவியலாது. அறுவை நிகழ்ந்த பின்னர் ஓரிரு மாதம் எழுத்தைப் பார்க்கக்கூடாது... அதற்குமுன் எஞ்சிய பகுதியாவும் எழுதி முடித்துவிட வேண்டும்.

மா.இரா. 28 கும்பம் 2000

பட்டறிவு

இன்றுவந்த தங்கள் திருமுகச் செய்தி மிகத்துயரந் தருவதே.... இறைவனையும் ஊக்கமாய் வேண்டுக. வெற்றி கிட்டும். இது என் பட்டறிவு.

பணங்கேளேல்

நா.செ. 1 நளி 1997

எனக்கு வலக்கண் படல அறுவை ஆடவை 4 ஆம் கிழமை 4 நடைபெறும். ஆதலால், ஆட்சிக் குழுக்கூட்டம் 3 ஆம் கிழமை யிறுதி (22) ஞாயிறன்று வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகரக் கிளையினரும் ஊரக அன்பரும் வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்வர். ஊரக அன்பர் மாதந் தொறும் எனக்கு 50 உரூபா அனுப்பி வருவதால் அவர்களிடம் பணங்கேட்க வேண்டேன். உடலுழைப்பை மட்டும் பெற்றுக் கொள்க. வேறிடங்களில் பணந்தண்டிக் கொள்க.

நா.செ. 20 விடை 2000