உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வாழ்நாள் குன்றும்

எனக்குக் கண்ணொளி குன்றிவிட்டது. தெருவில் முன் போல் நடமாட முடியாது. உண்டிச்சாலை உணவு எனக் ஏற்கவில்லை. எனக்கு வேண்டிய நூல்களும் அங்கில்லை. ஆகவே சென்னையிலிருந்தால் எனக்கு வாழ்நாள்தான் குன்றும் . எழுத்து வேலை ஒன்றும் நடைபெறாது.

ஈளை நோய்

மா.இரா. 20 மேழம் 2000

நான் ஈளைநோய்த் தொல்லையால் பொங்கலன்று (14.1.69) இங்கு வந்து சேர்ந்தேன். இன்று சற்று நலம். இம்மாத இறுதி வரை இங்குத்தான் இருப்பேன். அடுத்த மாத முதற்பக்கல் காட்டுப்பாடி திரும்புவேன்.

அஞ்சல் தவறினால்

LDIT.TIT. 20.1.69

வருகின்ற வெள்ளி (6.2.70) அரசினர் பேரியங்கியேறி வழக்கம்போல் அங்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்வேன் பேரியங்கி நிலையத்திற் காத்திருக்க.

திரு. ந. பிச்சுமணியார்க்கும் எழுதியிருக்கின்றேன். ஒரு கால் அவ்வஞ்சல் தவறினால் இது பயன்படுமென்று இதை விடுக்கின்றேன்.

அ.செ. 21. சுறவம் 2001

வாழை

என் உறையுளின் புறக்கடைப் பக்கம் சிறிது வெளிநிலம் உளது. அதில் காய்கறித்தோட்டம் போட்டிருக்கின்றேன். ருவாழை வைக்கவேண்டும். எனக்கு விருப்பமில்லாத பச்சை வாழை தவிர வேறொன்றும் இங்குக் கிடைப்பதில்லை. 30 கல் தொலைவிலுள்ள படைவீடு என்னும் ஊரினின்று மொந்தனும் கப்பல் வாழையும் (இரசதாளியும்) கொண்டுவரச் சொல்லி யிருக்கிறேன். நும் இல்லத்திலுள்ளது எனக்கு மிக விருப்பம். ஆர்க்காட்டு அன்பர் அடுத்தமுறை அவர் ஊர் வரும்போது இரு சிறு கன்று கொடுத்தனுப்ப முடியுமா? நான் இன்று ஊதைப் பொருளென்று வாழைக்காய்க் கறி உண்பதில்லை.