உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

203

கொம்பிற் பழுக்கவிட்டு உண்ணவே வாழை வைக்கின்றேன். நான் அண்மையில் அங்கு வரும் நிலைமை இல்லை.

ந.பி. 22 அலவன் 2001

கண்ணறுவை

அடுத்த மாதத் தொடக்கத்தில் கண்ணறுவை செய்து

கொள்வேன்.

ஈளை

இல.க.இர. 10.10.69

கடந்த மூவாண்டு பனிக்காலத்தில் என்னைத் தாக்கின ஈளைநோய் இவ்வாண்டு தாக்கவில்லை. ஆயின் என் மகன் மணி தாக்குண்டிருக்கிறான். அதற்கு ஒரே மருந்து பெனிடிராயல் (Bebedrayal) என்னும் முகிழமே (Capsule) இது இன்று வரத் தில்லை. ஆதலால் மேலங்காடிகளில் (Super Market) தான் கிடைக்கும்.

6.2.72 மி.மு.சி.

பாசிப்பயறு

விடை 9ஆம் பக்கல் (23.5.70) காரி இங்கு வருக. சென்னை சென்று என் சிற்றுண்டிக்கு வேண்டிய பம்பாய்ப் பாசிப்பயறு வாங்கிக் கொண்டு மறுநாள் ஞாயிறு கோவை செல்லலாம்.

6

மறை. நி. 9.5.70

நூலகம்

தமிழர் வரலாற்றுக் குறிப்புக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்தமாதம் பெரும்பாலும் நூலெழுதி முடிந்துவிடும்.

து முதுவேனிலாதலாலும் வேலூர் - காட்டுப்பாடி வெப்பமிக்க இட மாதலாலும் முற்பகலும் பிற்பகலும் மிகச் சிறிது நேரமே வேலை செய்ய இயல்கின்றது.

நீலமலைக்குச் செல்லும் வாய்ப்பிருப்பினும் நூலகம் ங்கிருப்பதால் டம் ம் பெயர இடமில்லை.

இல.க.இர. 20.5.70