உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

உறுதி

வெப்ப மிகையாலும் கண்ணொளி குன்றியமையாலும் வேனிற் காலத்தில் விரைந்தெழுத இயலவில்லை.

மாநாட்டிற்கு (ஆட்டை விழாவிற்கு) முன் தமிழர் வரலாறு வெளிவருதல் தான்முழுவுறுதி! 'தமிழர் மதம்’ சற்றுப் பிந்தினும் பிந்தலாம்.

இல.க.இரா. 25.6.70

இசைவு

திரு. மகாலிங்கனார் (பேரிலங்கனார்) ஆட்டை விழா மலரில் என். தி.த.ம. உரையினிற்று சில பகுதிகளைப் பெயர்த்து வெளியிட இசைவு வேண்டினார். என் நூல்களுள் எதினின்றும் எப்பகுதியும் பயன்படுத்த இசைவு தந்தேன். அவ்வட்டை வந்ததா என்று அறிக.

மயக்கம்

ந.பி.28.6.70

20 நாட்குமுன் ஒரு வகறை திடுமென மயங்கி விழுந்துவிட்டேன். அரத்தக்கொதிப்பின் விளைவாகத் தெரி கின்றது. இன்னும் முழுநலமில்லை. ஆயினும் கூட்டமும் என் வரவும் தவிர்க்க முடியாமல் என் மகனைத் துணைக்கொண்டு வருகின்றேன்.

ந.பி. 22.9.70

படுக்கை

நாங்கள் வந்தபின் ஒற்றைப் படுக்கையறை யொன்றை ஒரு நாளைக்கு அமர்த்தவேண்டியிருக்கும். நான் தலைசாய்த்துப் படுக்கமுடியாது. சுவரில் சாய்ந்து கொண்டே தூங்குவேன். எஞ்சிய இடத்தில் என்மகன் தூங்கிக் கொள்வான்.

ந.பி. 22.9.70