உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

சொற்பட்டி

205

ரு

இரு மாத்திற்கு முந்திய வலுத்த மூளைத் தாக்கற்குப் பின் இது (முச்சொற்பட்டி) முதன்முதல் எழுதப்படுவதால் மிகுந்த விழிப்புடன் எழுதிவருகின்றேன்.

கேட்குமுறை

தி.வை.சொ. 26.10.70

(அரசை) இரந்து கெஞ்சாது உரிமையொடும் அதிகாரத்

தொடும் கேட்க.

வேண்டும்

தி.வை.சொ. 28.10.70

செவ்வாழைக் கன்று ஒன்று வேண்டும். சேலத்திலேனும் இராசிபுரத்திலேனும் கிடைக்குமா?

சீரகச் சம்பா அல்லது சிறுமணிச்சம்பா ஒரு படியரிசி ஆற்றூரில் கிடைப்பின் வாங்கி வைக்க.

விளைந்த வேர்க்கடலைக் கொட்டையும் ஒருபடி வேண்டும். நா.செ. 13.3. '71

தங்கல்

சிலர் இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டும் நள்ளிரவில் குறுக்கும் மறுக்கும் நடமாடிக்கொண்டும் அடிக்கடி விளக்கைப் போட்டுக் கொண்டும் தூக்கத்தைக் கெடுப்பர். இன்று எனக்கு அமைந்த தூக்கம் வேண்டும். அடிகள் நூல்நிலையம் பின்கட்டு மேனிலையில் அறையில்லாவிடில் அரிநிவாசு போன்ற தங்கள் விடுதியில் இருநாட்கு ஏற்பாடு செய்க.

வ.சு. 30.7.73

முத்துலச்செப்பு

முட்டைமுளைவறை (Ovalitin)முத்துலச் (3பவுண்டு) செப்பு ஒன்று 60 உரூபாவிற்கு இருப்பதாகச் சொன்னான். ஒன்றிரண்டு முன்பணமாகக் கொடுத்து நிறுத்திவைக்கச் சொல்க. 31.12.74 சம்பளம் வாங்கியவுடன் பணவிடை செய்வேன் என்று தெரிவிக்க.