உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

குருபற்பொடிச் சிமிழ் 4 அல்லது 5 கொண்ட சுருள் ஒன்றும் குரு எண்ணெய் (குருதைலம்) ஒரு புட்டியும் வாங்கி வைக்கச் சொல்க. இதைத்திரு செல்லத்துரைக்கும் சொல்விக்க. மு.வ.ப.28.12.74

முட்டை முளைவறை

முட்டை முளைவறை தப்பாது வாங்கி வைக்க வந்தவுடன் பணம் கொடுத்து விடுவேன். குருபற்பொடியும் குரு எண்ணெயும் வேண்டும்.

மு.வ.ப. 4.1.75

வெப்பமிகை

சென்ற மாதம் முழுதும் வெப்பமிகையால் மிக இடர்ப் பட்டுப் போனேன். ஒருகிழமை அண்ணமும் நாவும் அழன்று பெரிதும் துன்புற்றேன். அதற்குமேல் தேர்தல் விளைவு தாங் கொணாத்துயரை விளைத்துவிட்டது. எல்லாம் இறைவன் செயலென்று ஒருவாறு தேறியுள்ளேன்.

கு.பூ.3.6.80

தங்கல்

நான் மதுரையில் தங்க அரசு தக்க ஏற்பாடு செய்திராவிடில் நுங்கள் இல்லத்தில் தங்கலாம்.

இரா.இ. 27.11.80