உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

இலக்குவனார்

இலக்குவனார் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? பெரு நடைச் செலவு வேண்டாமென்று ஏற்கெனவே தடுத்தேன். தமிழ்ப்பகைவரை நம்பி என் சொல்லைக் தட்டிக்கெட்டார்.

இலக்குவனார்

வி.அ.க. 30.7.65

இலக்குவனார்

ஒருவரே இந்தி யெதிர்க்குமாறு

மாணவனைத் தூண்டினார். அதனால் வேலையிழந்தார். அதைத் தமிழ்ப் புலவர் குழுவும் கண்டிக்கவில்லை.

புலவர் பொறுப்பேற்பு

சென்ற சுறவ (தை) மீ ஓர் இளையர் எனக்குத் தெரிந்த புலவரோடு வந்து தம்மைக் கோவை மாணவர் தலைவராகக் கூறி 'மொழிச்சிக்கல்' 50 படிகளை விற்றுப் பணமனுப்புவதாக வாங்கிக் கொண்டு போய்விட்டார். இன்னும் பணம் அனுப்ப வில்லை. சில நண்பர்க்கு எழுதிக் கேட்டபின் அவர் கோவை மாணவரல்லரென்று தெரிந்தது. அதன்பின் புலவர்க்கெழு தினேன். அவர் அப்படிகட்குரிய தொகையைத் தாம் தருவதாக ஏற்றுக்கொண்டார்.

பகைவர் எதிர்ப்புக்கு அடிப்படை

ஈருலகத் தமிழ் மாநாடுகளிலும் தனிநாயகம், மறை மலையடிகள் கூட்டத்தை விலக்கியதாலும், அரசும் அடிகளை மறைத்து என்னையும் விலக்கியதாலும், காமில் சுவெலபில் அடிகளை முறைகேடாகக் கண்டித்துப் பேசியதாலும் தமிழ்ப் பகைவர் இவ்வாறு துணிந்து எதிர்க்க இடமுண்டாயிற்று.

21 கடகம் 1999

செந்தமிழ்க் கிழார்

பொருளாளர் திரு. செந்தமிழ்க்கிழார் தமிழ்த்தொண்டில் ஈடுபட்டதற்கு அவர் பள்ளித் தாளாளர் கேட்டதனால் அவர் வேலையைவிட்டுவிட்டார். வேறு பள்ளிகளில் வேலைக்கு முயன்று வருகிறார். ஆடவை 22 ஆம் பக்கல் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டார்.