உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

209

ன்றிருப்பது திரவிட ஆட்சியே யன்றித் தமிழாட்சி யன்று. அதுவரைப் பத்து அல்லது பதினைந்தாண்டு செல்லும். அதற்கு ன்றிருந்தே கடுவுழைப்பும் பெரு முயற்சியும் சய்தல் வேண்டும். இன்று தமிழாட்சியிருப்பின் தமிழ் நிலையும் என் நிலைமையும் இங்ஙனம் இரா. பொருளாளர்க்கும் வேலை போயிருக்காது. அரசியற் கட்சித்தலைவர் சூழ்ச்சிகளை யும் அவர் கையாளும் வலக்காரங்களையும் இன்னும் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.

அடிகள் படிமைத் திறப்பு

ந.பி. ஆடவை 2000

மறைமலையடிகள் படிமைத் திறப்பு தனித்தமிழல்லாத வரைக் கொண்டு நிகழ்த்தின் நான் வர முடியாதென்று சென்ற ஆண்டே நாகைக் கோவையிளஞ்சேரனுக்கு எழுதிவிட்டேன். ‘சிலை' என்னும் சொல்பற்றிய ஒரு கட்டுரை மட்டும் விடுத்தேன்.. அது மலரில் வரும்.

பாராட்டுச் சொற்பொழிவிற்கு என்னை சைகுமாறு புலவர் கோவையிளஞ்சேரன் சென்ற கிழமை ஓரன்பரை அனுப்பியிருந்தார். நான் முன்பு செய்த முடிவே முடிவென்று சொல்லி யனுப்பிவிட்டேன். ஆரவாரம் வேறு; அமைதி வேறு. உண்மை வேறு, போலி வேறு; திரு வேறு, தெள்ளறிவு வேறு. ந.பி. 1 ஆடவை 2000

அமைச்சர்

மொழிப்பற்றின்றிக் கட்சிப் பற்றேயுடைய அமைச்சரை, இனி நம்பிப் பயனில்லை. நம் தமிழும் அவர் தமிழும் வெவ் வேறாம், மேலும், தமிழால் வயிறு வளர்த்துத் தமிழால் பெரும் பொருளீட்டும் தலைமைத் தமிழ்ப்பேராசிரியரே தமிழுக்கு மாறாயிருக்கின்றனர்.

மிகுசெலவு விரும்பாமை

இம்மாதம் ஊரக அன்பர்க்கு மாநாடு பற்றி மிகச் செலவு ஏற்பட்டிருக்குமாதலால் மேலும் செலவில் அவரை ஈடுபடுத்த நான் விரும்பவில்லை. நேரே பறம்புக்குடி சென்று விடுகின்றோம். அங்குத் தலைக்கூடி உவப்போம்.

அ.செ. 18 நளி 2000