உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

அருளின்பவாரியார்

திரு. அருளின்ப வாரியாரைப் பற்றித் தங்கள் மன்றம் அளவிறந்த உயர்வெண்ணம் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. ன்றுள்ள தொல்கதை (புராணச்) சொற்பொறிவாளருள் அவர் தலைசிறந்தவர் என்பதே என் மதிப்பீடு. 'தனித்தமிழ் என்பது அர்த்தமற்ற பேச்சு' என்று என் மாணவரொருவரிடம் சொல்லியுள்ளார். சேயோனும் சிவனும் ஒன்றே என்பதை அவர் அறியார். சுந்தரபுராணம் முற்றும் கட்டெனில் நம்பார். கோயில் வழிபாட்டைத் தமிழிற் செய்விக்க வேண்டுமென்னுங் கருத்தைக் கொள்ளார். மதத்துறையில் ஆரிய ஏமாற்றத்தைக் காணும் ஆற்றலோ அதைக் கண்டிக்கும் மதுகையோ அவர்க் கில்லை. இன்றும் நூற்றிற்கெழு பதின்மர் எழுதப் படிக்கத் தெரியாது மடம்பட்டுள்ள நாட்டிற் பெருவாரி மாந்தர் அவர் சொற்பொழிவைக் கேட்டதானல் மட்டும் அவர் பெரியாராகி

விட்டார்.

மேலும் மொழித்துறையை மதத்துறையினின்று பிரிப்பது உலகியலை மதவியலினின்று பிரிப்பது போன்றதே. கடவுளை நம்புகின்றவன் செய்கின்ற ஒவ்வொரு வினையும் அவனருளை முன்னியே செய்யப் பெறுவதால் வாழ்க்கை முழுவதும் ஈரியலும் அகங்கையும், புறங்கையும் போல் ஒன்றியே நிகழ்கின்றன. மொழித் துணையின்றிக் கூட்டு வாழ்க்கை இல்லை. ஆதலால் "ஒன்றே குலம் ஒருவனே தேவனும்” என்னுங் கொள்கையையே சொல்லளவில் மட்டுமின்றிச் செயன்முறையிலும் கடைப் பிடித்தல் வேண்டும்.

கா.இ.மு.10 அலவர் 2000

அடிகளார் நூல் விற்பனை

தண்டற்குச் செல்லும்போது மறைமலையடிகள் நூல் களை விற்பதும் தனித்தமிழ் பரவற்குத் துணையாயிருக்குமென்று கருதுகின்றேன்.

மணமகள்

கா.இ.மு. 18 சுறவம் 2001

சேலங்கல்லூரி மேனாள் முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டரின் இளைய மகள் (கடைக்குட்டி) வேங்கடேசன்,