உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

211

25அகவையினன். பொறியியல் இளங்கலைஞன் (B.E.) சென்னையில் அரசியல் அலுவலன். 1500 உருபாச் சம்பளம் பெறுவோன், அழகன், பொன்னிறத்தன், நற்குணன், திறமையன், மணப்பருவத்தான். ஆதலால் பெண் தேடுகின்றனர். இதுவரை தக்க பெண் அமையவில்லை. பொன்நிறமும் பொற்பும் ஒண் கல்வியும் உயர்குணமுள்ள பெண் உம் இனத்திலிருந்தால் உடனே தெரிவிக்க. வந்து பார்க்கச் சொல்கின்றேன். மணமகன் வீட்டார் கொங்குவேள்ளாண்குடியினரே. நும் இருமுது குரவர்க்கும் என் அன்பான நலவினவலைத் தெரிவிக்க.

மறை.நி. 17.8.71

வ.சு.உதவி

சுப்பையாபிள்ளை முன்பணம் போட்டுச் சிறப்பாகவும் விரைந்தும் கட்டடம் செய்வார். செலவு என் கணக்கில் இருக்கும். என் பொத்தக விற்பனைப் பணத்தில் எடுத்துக் கொள்வார்.

பொன்னுசாமி

திரு. சு. பொன்னுசாமி பி.ஏ., சென்னைத் துறைமுகப் பகுதிக் காவல் துறை உதவி ஆணையாளர்; என் பழைய மாணவர்; சிவனெறியர்; சிறந்த தமிழ்ப்பற்றாளர்.

வ.சு. 24.1.72

பதினாறில் பதினான்கு

பர். சட்டர்சி வங்கநாட்டுப் பிராமணர். வங்கமொழியிலும் சமற்கிருதத்திலும் பெரும்புலமை பெற்றவர். ‘நன்னெறிமுருகன் சட்டர்சி' என்பது மட்டும் தமிழில் எழுதக் கற்றிருக்கின்றார்.

முதலில் அவருக்குத் தமிழைப் பற்றி நல்லெண்ணந்தான் இருந்தது, இந்திய நாகரிகம் ஒரு ரூபாவில், 14 அணா திராவிடம் என்று வெளிப்படையாய்ப் பேசியும்எழுதியும் வந்தவர்.

காஞ்சி ஞானப் பிரகாச அடிகள்

வ.இ. 27.3.72

கா.ஞா. அடிகள் கருததைக் கட்டுரை வடிவிற்பெறுக. அது நீண்டோ குறுகியோ இருக்கலாம். வாழ்த்துப் பயன்படாது.

கா.இ.மு. 15.12.72