உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

வழக்கமாக வழங்கிவரும் தங்கள் கழகப் பொங்கல் நன் கொடை அறுபது ரூபா இன்று புலவர் செங்கைப் பொதுவனா ரிடமிருந்து பெருமகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டேன். இதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

அகரமுதலிப்பணி இயன்றவரை நடந்து வருகின்றது.

நா.செ. 10.2.76

கிரேக்க நாடகம்

நுங்கள் கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் மிக நன்றாயிருக்கின்றது. இத்தகைய வெளியீடுகள்தான் இக்காலத் திற்குத் தேவை. தமிழின் முதன்மை தாய்மை தலைமைகளை நாட்டுவதற்கு இதுபோன்றவை மிகத்துணை செய்யும்.

அடுத்த பதிப்பில் தமிழ்த் திரிசொல், சொற்றொடர்களை மூலத்துடன் காட்டி விளக்குவதுடன் திரவிட மொழியாள ரெல்லாம் உண்மை உணருமாறு குமரி நாட்டுத் தமிழ்த் தோற்ற வரலாற்றை வரைந்து தமிழின் திரவிடத் தாய்மையை நாட்டுவது நன்றாகும். அதோடு ஆங்கிலப் புலமையுள்ள ஒரு கிரேக்கப் பேராசிரியரிடம் இருந்தோ, கிரேக்கப் புலமையுள்ள ஓர் ஆங்கிலப் பேராசிரியரிடம் இருந்தோ மதிப்புரையொன்று பெற்றுக்கொள்வது மிகத் தக்கதாம்.

செந்தமிழ்க் கிழார்

இரா.ம. 29.8.78

பொருளாளர் செந்தமிழ்க்கிழார் பெயர் பட்டியலில் உள்ளதா? எனக்கு நினைவில்லை. அவர் மிக முதன்மை யானவர். வாழ்நாள் உறுப்பினர். பொறுப்பும் பொறுமையும் பெருந்தன்மையும் பண்பாடும் வினைத்திறமும் உண்மையும் உள்ளவர். அவர் பெயர் இல்லாவிடன் உடனே சேர்த்துக் கொள்க.

கு.பூ. 1.5.79

ஏற்பாடு

கன்னடத்தை நன்கு பேச எழுதக் கற்றுக்கொள்க. தமிழுக்கு நற்காலம் வரும்பபோது தமிழ்நாட்டிற் பணியாற்ற விரும்பின் ஏற்பாடு செய்வேன்.

கு.பூ.2.8.79