உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

213

முடியரசனார்

பாவலர் முடியரசனார்க்குப் பணமுடிப்பளிப்பது பெருந் தமிழ்த்தொண்டாகும். இத்தகையோர்க்கு அரசினர் அறுபதி னாயிரமும் பதினாயிரமும் கிட்டாமை பெரிதும் வருந்தத் தக்கதே.

அவர் ஓய்வு பெற்றமையும், சென்னை வரவும் இயலா திருப்பதும் இதுவரை எனக்குத் தெரியாது. ஓய்வுபெற்ற வறுமைப் புலவர்க்கு அரசு அளிக்கும் ஓராண்டு மாதப் பண வுதவிக்குப் பாவலர் வேண்டுகோள் விடுத்தாரா? அவ்வுதவி யைத் தீர்மானிக்கும் குழுவில் நானும் ஓர் உறுப்பினன். முந்தி மாதம் நூறு ரூபாவாயிருந்த நன்கொடை நன்கொடை இன்று இருநூற் றைம்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. பாவலர் சுரதாவிற்குப் பத்தாயிரம் நன்கொடையும் மாதவுதவியும் அளிக்கப்பட்டு வருகின்றது.

நம் பாவலர் துவரை வேண்டுகோள்விடுத்ததாகத் தெரியவில்லை. பேரா.கொண்டல் சு.மகாதேவன் எம்.ஏ.; பி.எசி. (M.A., B.Sc.,) செயலாளர், தமிழ் வளர்ச்சிக் கழகம், குறளகம், சென்னை - 1. என்னும் முகவரிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கச் சொல்க. இவ்வாண்டுக் கூட்டம் முடிந்துவிட்டது. இனி, அடுத்த

டிற்குத் தான். சிலையில் அல்லது சுறவத்திற் கூடும். எனினும், இன்றே விடுத்து வைக்கட்டும். ஆண்டுதோறும் ஐம்பதின்மருக்கு உதவுவதென்று கொள்கை. இவ்வாண்டு நாற்பதின்மருக்குத்தான் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனை யோர்க்குத் தகுதி இல்லை. ஒருவீடும், நிலமும் வேறுவகைச் சொத்தும் இன்றி மாதம் 100 உருபாவிற்கு மேற்படாத வருமான முள்ளவராயிருத்தல் வேண்டும். அவ்விடத்திற்குரிய மாவட்டத் தண்டலாளரின் பரிந்துரை அல்லது ஒப்புதல் வேண்டும். தமிழுக்குச் செய்த தொண்டும் குறிக்கப்படவேண்டும். அரசிற்கு மாறாயிருப்பவர்க்குக் கொடுக்கப்படமாட்டாது.

எழுத்து மாற்றம்

கு.பூ. 13.8.79

பெரியார்க்குத் தமிழ் எழுத்தை மாற்றவேண்டும் என்பது கருத்தன்று. சிக்கனம் பற்றியே தம் சொந்த இதழில் அதை மாற்றிக் கொண்டார். 25 ஆண்டுகள் அவரொடு தொடர்பு கொண்டிருந்தேன். ஒருமுறைகூடப் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப் பற்றிச் சொன்னதில்லை.