உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




214

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

1938- இல் அவர் ஈரோட்டிலிருந்து எனக்கெழுதிய எழு பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது.

1947இல் எனக்கும் புலவர் பொன்னம்பலத்திற்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

பெரியார்

கு.பூ. 17.9.79

பெரியார், நான் காட்டுப்பாடியில் இருந்தபோது வருமானமில்லையென்று வீடு தேடி வந்து இருநூறு உரூபா அளித்தார். சேலங்கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் இறந்தபின் அவர் மனைவியாரிடம் ஐயாயிரம் உரூபா நீட்டி னார். ஆயின் அவ்வம்மையார் தம் பண்பாடு பற்றி அதைப் பெறவில்லை.

மறைவு

19.11.79

சடுத்தம்

ஆராய்ச்சிப் பெரும்புலவர் மயிலை சீனி, வேங்கட சாமியார் மறைந்தார். உடனே இங்கு வருக. இருவேமும் சென்று உடம்பை எடுக்குமுன் காண்போம்.

மாலைச்செலவு எனது. துணையின்றியும் செல்லமுடியாது. என்பேரன் பயிற்சிச் சாலைக்குச் சென்றுவிட்டான். அதன்பின் செய்தி வந்தது.

போம்போது வேண்டுமாயின் வாகிவைத்துக் கொள்ளலாம். மாலை மயிலையில் வாங்கிக் கொள்ளலாம்.

புலவர் வீட்டு முகவரி : 22, காரணீசுவரர் கோவில் தெரு. மயிலை, சென்னை. இது Indian Express தாளால் தெரிந்தது.

சிங்கைப் புரவலர்

இரா.ம.

சிங்கைத் தமிழ்ப் புரவலர் முன்பு மாதந்தொறும் கடிதம் எழுதுவார். ஆண்டிற்கொரு முறையேனும் ஈரட்டியும் பான்மா வும் கலவழி விடுப்பார். இன்று அவை நின்றுவிட்டன. ஆறு மாதமாகக் கடிதமேயில்லை.