உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

217

அடுத்த ஆண்டு இலங்கை மலையா முதலிய வளி நாட்டுத் தமிழ் மன்றங்களும் இணைக்கப்பெறும்.

மாநாடு கன்னி 19ஆம், 20 ஆம் பக்கல் (அகுத்தோபர் 5,6) காரி, ஞாயிறு நடைபெறும்.

6

விழாத் தலைவர்

தி.எ.1.8.68

விழாவிற்குத் தலைவர் வேறொருவராயின் அவர் தனித் தமிழறிஞராகவோ அன்பராகவோ இருத்தல் வேண்டும். மறுமொழிக்கு நாளில்லையெனின் கம்பிச்செய்தி விடுக்க.

பரபரப்பு வேண்டாம்

தி.ச.8.4.68

விற்பனை மெள்ளவே நடக்கட்டும். பரபரப்பு வேண்டிய

தில்லை.

தி.அ.ம. 25.4.68

கட்சிச் சார்பு

புலவர் சேந்தமாங்குடியார் வருகின்ற ஞாயிறு (4.8.68) திருச்சிச் சங்கரன்பிள்ளை சத்திரத்தில் ஒரு கூட்டங்கூட்டுவ தாகவும், அதில் நம் மாநாட்டிற்கு அரசியலாரையும் நடிகரையும் வரவழைக்கத் தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாகவும் கேள்வி.

நம் (தனித்) தமிழ்க் கழகம் கட்சிச் சார்பற்றதும் தனித் தமிழே கடைப்பிடிப்பதுமாதலின் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டேன். அது கட்சிச் சார்பானது. என்னைக் கேளாது கூட்டப் படுவது.

தி.எ.1.8.68

மேற்கோள்

நீர் விரும்பியவாறு இத்தாளிற் பெயர்த் தொழுதப் பட்டுள்ள பகுதிகளையும் கூற்றுகளையும் மேற்கோளாகப் பயன்படுத்தலாம். ஆயின், பொத்தகத்தின் முகவுரையில் இப்பகுதிகள் பேரா.ஞா. தேவநேயனார் எழுதிய 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' என்னும் பொத்தகத்திலிருந்து

66