உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஆசிரியன் இசைவுபெற்று மேற்கொண்டாளப் பெற்றவை” என்று குறித்துவிடவேண்டும். அல்லாக்காற் பயன்படுத்தக் கூடாது.

ம.பு. 20.7. 69

என்று

முறைகேடு

அரசு எந்த அளவில் தமிழைப் புறக்கணித்ததுடன் அவ மதித்தது என்பதை எண்ணிப்பார்க்க. மறைமலையடிகளை முற்றும் மறந்துவிட்டுப் பிறர்க்குப் படிமை நிறுவியது. எனக்கு ஆராய்ச்சிவேலை வேண்டியதற்கு அகவை கடந்துவிட்டது சொல்லிவிட்டது. தமிழ்க்கூட்டுச் சொற்களையும் சொற்றொடர்களையும் புணர்ச்சியின்றியெழுதி வருகின்றது. பேராயத்தைச் சேர்ந்தவரும், தொல்காப்பியம் பாணிய வழிநூல் என்றவரும், “ராகவனென்பவன் ராஸ்கேல் தானா? “மோட்டார் வண்டியில் முன்சீட்டிலமர்ந்து” “முனிசிபல் சேர்மன் முறை ஜெகநாதன் முடித்துவைத்தார்” என்று பாடியவரும் தமிழ்ப் பகைவருமான ஒரு கடைப்பட்ட பாவலர்க்கு மாதம் 200 உரூபா அன்பளிப்பென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மும்மாதத்திற்குப்பின் மறைமலையடிகள் வழிப்பட்ட ஒரு தமிழ்த் தொண்டனுக்கு ஒரு வெற்றுத் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. உண்மையில் எனக்கு அளிப்பதாயின் 500 உரூபா விற்குக் குறைந்து நான் ஏற்க முடியாது. மறைமலையடிகளையும் வையாபுரியையும் சமமாக நோக்குமாயின் அதைக்கடுகளவும் பொருட்படுத்தேன்.

த.கு.ம. 24.10.69

இடையீடு

ஆ ரிய ஆட்சி (பேராய ஆட்சி) நீங்கினபின் நேரே தமிழாட்சி வர முடியாது. திராவிட ஆட்சி இடையிட்டுத்தான் வரும். ஆகவே இது இடைப்பெயர் காலம் (Transition Period) என அறிக.

தொண்டு

ந.பி.1.ஆடவை 2000

நும் தமிழ்த்தொண்டு மறைவாயிருக்க. ஏனைத் தமிழன் பரும் இங்ஙனமே.

ந.பி. 24. விடை 2000