உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

219

வாழ்க்கைத்துணை

வாழ்க்கைத் துணை இளம் பெண்ணாதலால் உலகியல் நன்றாய் அறியும்வரை தங்கையைக் கவனிப்பதுபோற் கவனிக்க. மாணிய (பிரமசரிய) நிலையில் விடுதலையும் குடும்பக் கவலையின்மையும் மகிழ்ச்சிக் கேதுவாம். மணவாழ்ககையில் சில இன்பங்களும் ஏந்துகளும் மகிழ்ச்சி விளைக்கும். அவ் விரண்டும் இன்றேல் மணவாழ்க்கையிலும் மாணிய வாழ்க் கையே சிறந்ததாம். ஆயின் கற்பைக் காத்துக் கொள்ளவேண்டும். அது கோடியில் ஒருவர்க்குத்தான் இயலும்.

மணவாழ்க்கை எல்லார்க்கும் தொடக்கத்திலேயே இன்பந் தருவதில்லை. ஆதலால், சற்றுப் பொறுமையாய் இருத்தல் வேண்டும். சிலர்க்கு இன்பத்தில் தொடங்கித் துன்பத்தில் முடியும். சிலர்க்கு துன்பத்தில் தொடங்கி இன்பத்தில் முடியும். சிலர்க்கே என்றும் இன்பமாகவே இருக்கும். பெண்ணின் பெற்றோர் திருமணத்தின் பின் சொத்துத் தருவதாகச் சொல்லி நிறைவேற்றுவதுமுண்டு. ஏமாற்றுவதுமுண்டு. நிறைவேற்றாதவர் சிலர், புரோகிதத் திருமணம் நடைபெறவில்லையென்றோ, மருமகனுக்குக் கடவுள் நம்பிக்கையில்லையென்றோ கரணியங் காட்டுவர். கூர்மதியுள்ள மணமகன் திருமணத்தின் முன்னம் பெற்றுக்கொள்வான்; அல்லது பெறும்வரை பெண்ணின் பெற்றொர் விருப்பப்படி நடந்துகொள்வான். எது எங்ஙன மாயினும் கடவுளை நம்பி முயற்சி செய்யின் கருதியது கைகூடும். கூடாவிடினும் வேறுபயன் விளையும்; ஆறுதலும் கிட்டும்.

66

‘கிட்டாதாயின் வெட்ட மற” என்னும் பொன்மொழியைக் கடைப்பிடித்து முயற்சி பயன்தராவிடின் வீண்கவலையின்றித் தென்பாயிருத்தல் வேண்டும்.

ந.பி. 25 நளி 2001

நீலமலைச்செலவு

ஆட்சிக்குழுக் கூட்டத்தின்பின் நான் நீலமலை சென்று ஒரு மாதம் போல் தங்கிச் சென்ற செவ்வாய்தான் மீண்டேன். அக்காலத்துப் பாவூர்க் கணியனைப் பற்றி முற்றும் மறந்து போனேன். இன்று கணியர் இ.மு. சுப்பிரமணியம் பிள்ளைக்கு (சங்கரநயினார்கோயில் திருநெல்வேலி மாவட்டம்) எழுதிக் கேட்டிருக்கின்றேன். விடைவந்ததும் தெரிவிப்பேன். அண்மையிற்