உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

சென்னை செல்ல நேரும். அங்கும் திரு. வ. சுப்பையாப்பிள்ளை போன்ற பலரை உசாவியறிகின்றேன்.

இல.க.இ. 8.8.69

கண்ணொளி

பாவூர்க் கணியாளைப் பற்றிக் கணியர் இ.மு. சுப்பிர மணியப்பிள்ளைக்கும், திரு.வ. சுப்பையாப்பிள்ளைக்கும் எழுதிக்கேட்டுப் பன்னாளாகியும் இன்னும் மறுமொழி வர வில்லை. எனக்குக் கண்ணொளி குன்றியிருப்பதால் எங்குஞ் சென்று ஏனையோரை வினவவும் இயலவில்லை.

அடுத்த மாதத் தொடக்கத்தில் எனக்குக் கண்ணறுவை இங்கு (சென்னை) நிகழும் அதன்பின் இருமாதம் வேலை செய்ய முடியாது.

இல.க.இ. 10.9.69

பாவூர்க்கணியாள்

பாவூர்க் கணியாளைப் பற்றிக் கணியர் இ.மு. சுப்பிர மணியப் பிள்ளைக்கு எழுதியதற்கு இன்னும் மறுமொழியில்லை.

நேற்றுச் சை.சி.நூ.ப.க. தலைவர் திரு.வ.சுப்பையாப்பிள்ளை என்னைப்பார்க்க இங்குவந்திருந்தார். அவரும் தெரியவில்லை யென்று சொல்லிவிட்டார்.

என்னையின்று விரும்தோம்பும் திரு. முத்துக்கிட்டிண னார் ஒரு மலையாளியை வினவியிருக்கிறார். அவர் உசாவி யறிந்து தெரிவிப்பதாகச் சொன்னராம். தெரிவிப்பின் உடனே எழுதுவேன்.

தொண்டு

இல.க.இ. 10.10.69

முதற்கண் அலுவற் கடமையைச் செவ்வனே ஆற்றுக. அடுத்து வாழ்க்கைத் துணையைக் கவனிக்க. அதன்பின் தமிழ்த் தொண்டில் ஈடுபடுக.

ந.பி. 25 நளி. 2001

அன்று பறப்புக்குடியிறல் தாங்கள் பரிந்துரைத்த தமிழ்ப் புலவர் தாம்பெற்ற தி.த.ம.உரைப்படிக்கு இன்னும் பணம்