உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

7.

8.

9.

10.

11.

பாவாணர் கடிதங்கள் சென்னை ப.க.க. அகர முதலியைத் திருத்தாமை.

தனித்தமிழ்ப் பற்றின்மை.

பாடல்கள்

கோவைத் துரைச்சாமி நாயக்கர் போன்ற புதுப்புனைவாளரையும் என்போன்ற மொழியாராய்ச்சியாளரையும் ஊக்காமை (கட்சியில் சேர்த்து கட்சித் தலைவரை வரம்பிறந்து புகழ்ந்து அடிமைகளாய்ப் போனவர்களுக்கே வேலையளித்தல்.)

அறிவியற் குறியீடுகளைத் தனித்தமிழில் ஆக்கிக்கொள்ளாமை. திராவிட இயக்கமாயிருந்து மலையாளியரைப் பெருக்கித் தமிழர் நலத்தைக் குறைத்தல்.

பாவூர்க்கணியாள்

த.கு.ம. 20 மடங்கல் 2002

'பாவூர்க்கணியாள்' பற்றிச் சிறிது விளக்கம் கிடைத்திருக் கிறது. என் நண்பர் எழுதியிருக்கும் மடலில் குறிப்பிட்டிருப்ப தாவது:

அவர்களுக்குப் ‘பாழூர்க் கணியார்' என்று பெயர். அவர்கள் மிகப்பேர் பெற்ற கணியர் குடும்பத்தார். எர்ணாகுளத்தி லிருந்து 20 கல் தொலைவில் இருக்கிறார்கள். குடும்பத் தலைவர் காலமாகிவிட்டார். பிள்ளைகள் தொடர்ந்து கணியராய் ருக்கிறார்கள். மேலும் குறிப்பாக ஏதாவது செய்தி கேட்டால் அறிந்து எழுதுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நால்வகை எழுத்து

இல.க.இ. 25.3.70

நால்வகை எழுத்துள் எவ்வகைக்கும் முற்பட்டது மொழி. எகுபதியக் கருத்தெழுத்து விளக்கம் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆயின் சிந்து நாகரிகக் கருத்தெழுத்து விளக்கம் கண்டுபிடிப்பு நிலையிலேயே இன்றும் இருக்கின்றது.

விடை எழுதுக

இல.க.இ. 5.6.70

விடுமுறை நாளில் அல்லது ஓய்வுநாளில் அசோகா வுண்டிச்சாலை சென்று, கீழ்க்காணும்வினாக்கட்கு விடை யறிந்தெழுக.