உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

உறுப்பினர் நிலை

உ.த.க. உறுப்பினர் பெரும்பாலும் எளியவர். முப்பெருஞ் சைவ மடத் தம்பிரான்மார், பெருநடிகர், பல்கோடிச் செல்வர் ஆகியவரைத் தக்காரொடு அடுத்தால்தான் விரைந்து பெருந் தாகை தொகும். ஒரு ருபா உறுப்பாண்மைக் கட்டணஞ் செலுத்தவுந் தயங்குவாரைக் கேட்பது நன்றன்று.

என்

பொறுப்பாளர் கடமை

தி.வை.சொ. 221.70

பொருட்செய்திகளில் தங்களையே கேட்டுச் செய்தல் வேண்டும். கழகக் கொள்கையும் நடப்புமுறையும் பற்றித்தான் கருத்தைத் தெரிவித்தல் முறையாகும். செயலாளர் கடமை தலைவர் ஏவியதைச் செய்தலேயன்றித் தலைவரையும் பொருளாளரையும் ஏவுதலன்று. அடாது செய்ததன் விளைவை ஒருமுறை பட்டறிந்தால்தான் தெரியும்.

நா.செ. 3.4.70

கட்சிச் சார்பின்மை

நம் உ.த.க.வில் கட்சிச் சார்பற்றவர்தான் இருக்கமுடியும். எக்கட்சியாயினும் நல்ல திட்டங்களைப் போற்றலாம். அவற்றை ஊக்கி ஒத்துழைக்கலாம். ஆயின் கட்சித் தலைவரை முன்னும் தமிழைப் பின்னும் வைப்பவர் உறுப்பினராயிருக்க முடியாது. மி.மு.சி. 5.9.70

உ.த.க. கொடி

கொடிநிற அமைப்பு வகைகள் :

வானநீலம்,

வள்ளை, அரத்தச் சிவப்பு (எழுவகை அமைப்புகளை வரைந்துளார். நடுவிலுள்ள பூ பல வடிவிலிருக்கலாம் என ஐவகை வடிவு காட்டியுள்ளார்.)

நிற விளக்கம்

1. வானநீன்மை நீலவானத்தையும் நீலக்கடலையும் குறித்து வியனுல கியன்மையை (University) உணர்த்தும்.