உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

2.

233

வெண்மை தமிழின் தூய்மையையும் தமிழ்ப்பண்பாட்டின் தூய்மை யையும் பகையின்மையையும் உணர்த்தும்.

3. செம்மை செல்வம் மறவம் ஈகம் (தியாகம்) ஆகியவற்றை உணர்த்தும்.

மி.மு.கி. 8.12.70

மாநாடு

உ.த.க. மாநாடு இக்கிழமையே காரி ஞாயிறு (9.10.1.71) மதுரைத் திருப்பரங்குன்றச் சாலையிலுள்ள வெற்றித் தனிப் பயிற்சிக் கல்லூரிப் பேரரங்கில் நடைபெறுகின்றது. தவிர்க்க முடியாத சில நிலைமைகளால் ஒத்திவைக்க இயலவில்லை.

ச்செய்தியை அன்பர் அனைவருக்கும் தெரிவித்து விடுக. வரக்கூடியவரெல்லாம் வருக.

இசை

ந.பி. 5.1.71

மாநாடு பொங்கலுக்குப் பின் நடப்பின், 'தமிழர் இசை நலமும் நலிவும்' என்னும் பொருள்பற்றிப் பேசுகின்றேன்.

வேறு

வி.அ.க. 21.12.71

தமிழியக்கம் வேறு; உ.த.க. வேறு. (அதன்) முயற்சி யானையைப் பூனை எதிர்ப்ப தொத்ததே.

இல.க.இர 14.7.72

ஆட்சிக்குழு

13.8.72 ஞாயிறு காலை 10 மணிக்கு என் இல்லத்தில் ஆட்சிக் குழுக்கூட்டம் கூடுகின்றது. தொலைவிலிருந்து வருபவர்க்கெல்லாம் இயலுமாயின் இரு வழிச் செலவிற்கும் ன்றேல் ஒருவழிச் செலவிற்கும் பணந்தர ஏற்பாடு செய்வேன். 14 மாவட்டத்தாரும் வருவர்.

இந்தியெதிர்ப்போடு கூடிய உ.த.க. மாநாடு இவ்வாண்டு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்படும்.

இல.க.இர. 14.7.72