உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234

பாவாணர் கடிதங்கள்

பட்டிமன்றம்

பாடல்கள்

-

இவ்வாண்டிறுதி சென்னையிற் பட்டிமன்றம் தலைப்பு தமிழர் பழங்குடி மக்களா, வந்தேறிகளா? பழங்குடி மக்கள் - ஞா.தே; அப்பாத்துரை முதலியோர். வந்தேறிகள் நீலகண்ட சாத்திரியும் தெ.பொ.மீ.யும். அல்லது அவர்களால் அமர்த்தப் பட்டோர். நடுவர் -குன்றக்குடி அடிகள், செட்டிநாட்டரசர், கருமுத்து தியாகராசச் செட்டியார், கோவைத் துரைசாமி நாயக்கர், பற். மணவாள ராமானுசம், நீ, கந்தசாமிப்பிள்ளை, பர்.வ.சுப. மாணிக்கம், ஒளவை சு. துரைச்சாமி, மே.வீ. வேணு கோபால், மயிலை சீனி. வேங்கடசாமி.

நடுவர் தீர்மானமே நிலையான முடிவு. எதிரிகள் வரா விடின் தோற்றவராவர். பிற ‘வலம்புரி’யிற் பார்க்க.

14.8.72

பட்டிமன்றம்

தீரு. நீ.க. பிள்ளையை விரைந்து பார்க்க. பட்டிமன்றம் அல்லது கருத்தரங்கு மாநாடு சென்னையிலேனும் திருச்சியி லேனும் நடைபெறலாம்.

உ.த.க. வளர்ச்சிக்கு முதன்மொழி மாதந்தோறும் ஒழுங்காக வளிவருவது ன்றியமையாதது. புலவர் சின்னாண்டாரும், பேரா. சொக்கப்பனாரும் இசையில், பொறுப்பேற்று நடத்துக. அதனால் ஏற்பட்டுள்ள 500 உரூபாக் கட னை முதற்கண் தீர்க்கச் சொல்வரென்று நினைக்கின்றேன்.

இதழ் நடப்பின், மாதந்தொறும் செய்தியோ, கட்டுரையோ விடுப்பேன். அது நடவாமையாலேயே வலம்புரியில் வருகின்றது. உ.த.க. எல்லாக் கிளைகளும் வாங்குமாறு வற்புறுத்தவுஞ் செய்யலாம். த.ச.த. 5.10.72.

பட்டிமன்றம்

தவத்திருக்குன்றக்குடி அடிகள் தலைமை தாங்க இசைந்து விட்டார்கள். பேரா.ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையும் பர்.வ.சுப.மாணிக்கனாரும், தஞ்சைப் பெரும்புலவர் நீ கந்தசாமிப் பிள்ளையும் நடுவராக இசைந்துள்ளனர். பிறரும் பெரும்பாலும்

சைவர்.