உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

235

நீலகண்ட சாத்திரி, சட்டர்சி, தெ.பொ.மீ. ஆகிய மூவர்க்கும் அறைகூவல் விடுக்கப்பெறும். அப்பாத்துரையும் நானும் குமரிநாட்டுண்மை நாட்டுவோம். எதிரிகள் மறுக்க வேண்டும். அவர் வராவிடின் அவர் தோல்வியே. எங்ஙன மாயினும் முடிபொன்றேயாகும். அதன்பின் உலகமுழுதும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இல.க.இ 25.10.72

உ.த.க. மாநாடு

உ.த.க. மாநாட்டிற்கு மாவட்டத் தண்டற்பணம் இவ் விருநூறு நவம்பர் இறுதிக்குள்ளேயே பொருளாளர்க்கு அனுப்பிவிடவேண்டுமென்று ஆட்சிக்குழுக் கூட்டத்திற் சொன்னதுமன்றி, 'வலம்புரி'யிலும் நினைப்பூட்டு விடுக்கப் பட்டது. ஆயினும் திசம்பர் கரு வரை ஒருவரும் அனுப்பவில்லை. அதன்பின் தெ.ஆ.மா. நெய்வேலியிலிருந்து 50 உரூபாவும். நெல்லை நல் மாவட்டத்திலிருந்து 130 உரூபாவும் மட்டும் வந்துள்ளன. மாநாட்டிற்கோ 1500 உருபாவிற்குக் குறையாது வேண்டும்.

உடனே பணம் வராவின் மாநாடு பணம் சேரும் வரை ஒத்திவைக்கப்படும். இதனால் இடர்ப்பாடும் ஓரளவு இழப்பும் உண்டாகும். இதைப் புலவர் முருகவேளிடமும் புலவர் உள முருகனாரிடமும் காட்டுக.

உ.த.க. மாற்றியமைத்தல்

ஆடல். 19.12.72

உ.த.க. விரைந்து மாற்றியமைக்கப்படவிருக்கின்றது. து பற்றி வருகின்ற ஞாயிறு இங்கு ஒரு கூட்டங்கூடும். வேலூர்த் தலைமகனார் (Captain) அசரியா தலைவர்; பெருஞ்சித்திரனார் துணைத்தலைவர்; உள்நாட்டுச் செயலாளர் புலவர் இறைக் குருவனார்; வெளிநாட்டுச் செயலாளர் ‘வல்லமை’ ஆசிரியர்.

கா.இ.மு. 10.6.74

செனெகல் தலைவர்

மாநாட்டின் செனெகல் நாட்டுக் குடியரசுத் தவைவருடன் தொடர்பு கொள்ளப்படும். அவர் அண்மையில் கூட்டவிருக்கும்