உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

திரவிட மாநாட்டில் உ.த.க. கலந்து கொள்ள எல்லா முயற்சியும் செய்யப்படும். அவர் திரவிட மொழி நாகரிகப் பண்பாட்டா ராய்ச்சியில் அளவிறந்து ஈடுபட்டுள்ளார்.

செனெகல் தலைவர்

கா.இ.மு. 10.6.74 .மு.10.6.74

அடுத்த மாநாடு பற்றியும், செனெகல் நாட்டுக்குடியரசுத் தலைவரோடு தொடர்பு பற்றியும், உசாவி முடிவு செய்ய 10.8.74 காரி காலை 10 என் இல்லத்தில் உ.த.க. ஆட்சிக்குழுக்கூட்டம் நடைபெறும். மாவட்ட அமைப்பாளரும் அழைக்கப்பட்டுள் ளனர். செயலாளர் அறிவிப்பு இதற்கு முன்பே புலவர் முருக வேட்கும் வந்திருக்கும்.

கா.இ.மு. 1.8.74

ஆட்சிக்குழு

10.8.’74 அன்று என் இல்லத்தில் ஆட்சிக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

அரசு என்னைத் தடுக்காதவரை நானே உ.த.க. தலைவனா யிருக்கவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

1975 ‘சனுவரி’ முதற்கிழமை சென்னைப் பெரியார்திடலில் உலக முதன்மொழித் தீர்மானிப்பு மாநாடு நடத்துவதென்றும் அதற்கு ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளரும் 300 உரூபா தண்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டன.

மாநாடு ஒருநாள்தான் முற்பகல் முதலமைச்ருக்கும் அடிகட்கும் பாராட்டு; பிற்பகல் உ.த.க. மாநாடு, செனெகல் நாட்டுக் குடியரசுத் தலைவரோடு தொடர்பு கொள்ளுமாறு காட்டுப்பாடித் திரு. அசரியா க.மு. வெளிநாட்டுறவுச் செய லாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.

18.8.74 அன்று பாராட்டுக் குழுவும், மாநாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டன.

கா.இ.மு. 30.8.74