உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

237

அரிசிவிலையும் மாநாடும்

7

அரிசிவிலை படி 7 உருபா ஆகிவிட்டதனால் இந்நிலையில் மாநாடு வேண்டாமென்பாரும் உளர்.

மாநாடு பிந்தப் பிந்தச் சிறப்பு மிகும்.

கா.இ.மு. 4.1.75.

பொறுப்பாளர்

தலைமைப் பொதுக்குழுவை வங்காலூரிலேயே கூட்டலாம். அடுத்த மாநாட்டையும் அங்கேயே நடத்தலாம். இயன்றவரை பணியாளரெல்லாம் ஆங்கிலப் பட்டந்தாங்கிய ராயிருப்பதே இக்காலத்திற்கேற்றது. ஆதலால், புலவர் கிழாரைச் செயலாளராக்கிவிட்டுத் தாங்களே அமைப்பாளராகுக. பேரா.இளவரசைத் தமிழ் மாநிலப் பொது அமைப்பாளராக அமர்த்தலாம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மூன்றுந் தெரிந்த புலவர் ஒருவரே அம் மும்மொழிநாட்டுப் பொது அமைப்பாளராக இருப்பது நன்று. குடந்தைப் புலவர் கதிர் தமிழவாணனைப் பள்ளிகளிலும், பேராசிரியர் இளவரசையே கல்லூரிகளிலும் மாணவர் உ.த.க. கிளையமைப்பாளராக அமர்த்தலாம். மகளிர் கல்லூரிகளில் இப்பணிக்குப் பேரா. தாயம்மாள் அறவாணனை அமர்த்தலாம். பேரா.கோ. நிலவழ கனாரை ‘முதன்மொழி' ஆசிரியராக அமர்த்தலாம். தென்னிந்தியா முழுதும் உ.த.க. கிளைகளைத் தோற்றுவித்தல் வேண்டும்.

பொறுப்பாளர்

கு.பூ. 8.7.78

காட்டுப்பாடி விரிவிலுள்ள தலைமகன் (cap) அசரியா எம்.ஏ., உ.த.க. வெளிநாட்டுறவுச் செயலாளராயிருக்க இசைந் துள்ளார். அவர் 1926இல் கிறித்தவக் கல்லூரியினின்று ஆங்கில முதுகலை தேறிப் பொற்பதக்கம் பெற்றவர்.

அடுத்த ஆண்டு வெங்காலூர் ஆங்கிலச் சார்புக்குழுப் (Commitee for English) புலவரான ஓய்வுபெற்ற இந்தியப் படைத் தலைவர் கரியப்பாவின் தலைமையிற் சென்னையில் அனைத்திந்திய இந்தியெதிர்ப்பு மாநாடு கூட்டக் கருதுகின்றேன். செயலாளர் Pro A.M. Dharmalingam M.A. I.L.m., 5 Wheelar Rd/ Bangalore - 5. Phone 577883. நானும் ஓர் உறுப்பினன்.

கு.பூ. 24.7.78