உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




238

மாநாடு

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

நாலாண்டிற்குப் பின்னும் நாட்டுத் தலைநகரிலும் மிகச் சிறப்பாக நடைபெற வேண்டிய உ.த.க. மாநாடு மிகக் கேடாக நடைபெற்றது. ஐயாயிரவர் வரவேண்டிய மாநாட்டுக்கு ஐந்நூற்றுவரே வந்தனர். இருநாள் மாநாடு ஒருநாள் நிகழ்ச்சி யாயிற்று. ஊர்வலமில்லை. போதிய விளம்பரமில்லை. நாடு முழுதும் அறிவிப்புமில்லை.

பொருளாளர்

கு.பூ.9.8.78

செந்தமிழ்க்கிழாரே என்றும் பொருளாளராய்

திரு.

இருத்தல் வேண்டும்.

இணைவிடுமுறை

கு.பூ.9.8.78

நான் உடனடியாக வெங்காலூர் வரவியலாது. வேலை மிகுதி. நான் வருங்கால இருநாள் தொடர்ந்து விடுமுறையாய் ருத்தல் வேண்டும்.

அகுத்தோபர் 1,2; 10, 11; 24, 15; 29, 30 இணைவிடுமுறை

நாட்கள்.

:

நவம்பர் : 11, 12; திசம்பர் : 9, 10, 24, 25உம் இணை விடுமுறை நாட்களே. திசம்பர் 9, 10 எனக்கு ஏற்கும். மாநாட்டில் எனக்குப் போர்த்திய போர்வைக்கு நன்றி. அது இன்று மிகப் பயன் படுகின்றது.

கு.பூ. 21.9.78

பணந்தண்டல்

இன்று இங்கு முதுவேனில் தொடங்கிவிட்டது. காலைக்குப் பின் கதிரவன் மறையும் வரை கடுவெப்பம். அடுத்த மீ 20 ஆம் பக்கல் சும்மா இருக்கின்ற திறமும் அரிது. அந்நிலையில் கூட்டத்தை எங்ஙன் நடத்துவதென்று தெரியவில்லை. ஆதலால் மறைமலையடிகள் நூல் நிலையத்தில் வைத்துக் கொள்வதே நல்லது. அங்ஙனமே அழைப்பிதழில் தெரிவித்துவிடலாம்.