உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

239

வெங்காலூரிலும் நடத்தலாம். ஆயின் நான் வரமுடியாது. அதனால் ஒரு கேடுமில்லை. நானின்றியும் கூட்டத்தை நடத்த லாம். இரண்டில் எது சிறந்ததென்று எண்ணிச் செய்க.

இற்றை நிலையில் உ.த.க.விற்கு நன்கொடை தண்ட வாயிலாகத்தான் பணஞ்சேர்க்க முடியும். தண்டபாணி தேசிகரும், தியாகராச பாடகரும், நகைச்சுவை நடிகர் கிருட்டிணனும் போன்றோர் இன்றில்லை, இசையரங்கு நிகழ்த்திப் பணந்தண்டித் தர, எனினும் ஈராண்டு கழித்து நிலைமை திருந்துமென நினைக்கிறேன்.

அமர்த்தம்

கு.பூ.20.4.79

உ.த.க. நன்னடப்பும் வளர்ச்சியும் நோக்கி, வெங்காலூர்ப் பேரா. பூங்காவனம், க.மு. தலைமைச் செயலராக அமர்த்தப் பெற்றுள்ளார்.

செயற்குழு

கா.இ.மு. 25.4.79 .மு.25.4.79

உ.த.க. தலைமைக் கழகச் சிறப்புச் செயற்குழுக்கூட்டம் பின்கண்டவாறு நடைபெறவுள்ளன. உ.த.கழகத்தின் முடுக்க

மான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் இக்கூட்டத்திற்குத் தாங்கள் தங்கள் செலவிலேயே தவறாது வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

ம்

ம் : மொழிநூல் மூதறிஞர் பாவாணர்அவர்களின் இல்லம் எசு.பி. 57, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 78. நாள் : தி.பி. 2 010 விடை 6 (20.5.79) காலை 10 மணி. பொருள் :

1. பல்துறைப் பொறுப்பாளர் அமர்த்தம்

2.

3.

4.

5.

உ.த.க. கிளைகளைப் புதுப்பித்தல். புதுக்கிளைகளைத் தோற்றுவித்தல். உ.த.க. பொருள்வருவாய்க்கு வழிவகை காணல்

உ.த.க. மேற்கொள்ளவேண்டிய பணிகள்

முதன்மொழி இதழை உயிர்ப்பித்தல்

6. தலைவரின் ஒப்புதல் பெறும் பிற.

26.4.79