உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

செயற்குழு

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

செ.சொ. அகரமுதலி அலுவலகத்திலும் கூட்டத்தை நடத் தலாம். விடுமுறை நாளில் நடத்துவது குற்றமாகாது. ஆயினும் மறைமலையடிகள் நூல் நிலையத்தில் நடத்துவதில் சில ஏந்து களுண்டு. திரு.வ. சுப்பையா பிள்ளையையும் நூலகரையும் கூட்டிக் கொள்ளலாம். அண்மையில் உண்டிச் சாலைகளும், வண்டி நிலையங்களும் உள்ளன.

வ்வாட்டை உ.த.க. மாநாட்டை ஆண்டிறுதியில் வெங்காலூரிலேயே நடத்த ஏற்பாடு செய்துகொள்க.

அடுத்த ஆண்டு நெல்லையிலாவது நாகர்கோவிலிலாவது நடத்த முயற்சி செய்யலாம்.

கு.பூ. 1.5.79

பொறுப்பாசிரியர்

தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டிற் பணியாற்றுபவ ராகத்தான் இருத்தல் வேண்டும்.

தலைமைச் செயலாளர் ஆங்கிலப் பட்டந்தாங்கியாய் இருத்தல் வேண்டும்.

இவ்வாண்டிற்குள் தக்கார் ஒருவரைத் தலைமைச் செயலாளராக அமர்த்தி விடலாம்.

மாவட்ட அமைப்பாளர் மாநாட்டுக்குப் பணந்தண்டிக் கொடுத்தாற் போதும். அதே அவர்க்கு அரிதாயிருக்கின்றது. அரசிடம் ஏராளமாய்ப் பணமிருக்கின்றது. முதல்வர் மனம் வைத்தால் இலக்கக் கணக்காய் ஒதுக்கலாம். இன்று எம் அகர முதலித் துறைக்கே ஒரு பெருந்தொகை ஒதுக்கவேண்டியுள்ளது. அக்குறை தீர்ந்தபின் அவரை அடுக்கலாம்.

கு.பூ. 2.5.79

மாநாடு

அடுத்த மாநாடு சற்றுப் பிந்தி நடப்பினும் தமிழ்நாடு முழுவதும் அதிற் கலந்துகொள்வதும் உலகத் தமிழர் அனைவரும் அதனொடு தொடர்பு கொள்வதும் இன்றியமையாததாம்.

கு.பூ. 5.7.79