உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




242

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

6. அமைப்புகளும் நிகழ்ச்சிகளும்

மறைமலையடிகள் நூல் நிலையம், 105. இலிங்கிச் செட்டித் தெரு, சென்னை - 2.

14, சுறவம், 1998

அன்பீர்,

வணக்கம்.

1. அமைப்பு

காப்பாளர், தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், பொது உறுப்பினர். அனைவரும் தனித்தமிழ்ப் பற்றினராயும், தனித்தமிழிற்பேச முயல்பவராயுமிருத்தல் வேண்டும். பிறமொழிகளிற்பேசவும் எழுதவும் நேரும்போது அங்ஙனம் செய்யலாம். தமிழிற் பேசும் போதும் எழுதும்போதும் பிறமொழிச்சொல் கலத்தல் கூடாது. மாதக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம் ஒரு தொகை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

2. குறிக்கோள்

தனித்தமிழை வளர்த்தல், திருமணமும் ஏனையிருவகைச் சடங்குகளும் தனித்தமிழில் நடத்தலாம் இயன்றவரை நடப் பித்தலும்.

3. நடப்புமுறை

மறைமலையடிகள் நூல்களையும் பிறர் எழுதிய தனித் தமிழ் நூல்களையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தி னின்று (1/140, பிராடுவே,சென்னை - 1) வங்கி ஒரு தனித்தமிழ் நூல் நிலையம் அமைத்துக் கொள்ளுதல் அந்நூல்களை ஒழுங்காய்ப் படித்தலும்.

ஆண்டுதோறும் தனித்தமிழ்ச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துவிழா நடத்துதல். நூல் நிலையத்திற்கும் கழக அலுவற்கும் சொந்தமாகவேனும் வாடகைக்கேனும் ஒரு கட்டிடம் அமைதல்.