உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

4.இணைப்பு

பிற

இடங்களிலுள்ள

243

தனித்தமிழ்க் கழகங்களோ

டிணைத்துத் தமிழ்நாடு முழுதும் ஒரே தனித்தமிழ்க் கழகம் இயங்கச்செய்தல்.

புலவர் சேந்தமாங்குடியார் (42-அ,5-ஆம் குறுக்குச்சாலை, பரமசிவபுரம், திருத்தவத்துறை (இலால்குடி) திருச்சி மாவட்டம் ஏற்கெனவே முசிறி வட்டத்தில் ஒரு தனித்தமிழ்க் கழகம் தோற்றுவித்துள்ளார். அவருடன் தொடர்பு கொள்க. 5. சிறப்புத் தொண்டு

தனிப்பட்டவர் நன்கொடையாகவேனும் பலரிடம் தண்டி யேனும் தனித்தமிழுக்கு ஆக்கந்தரும் ஒரு புதுநூல் வெளி

யிடப்பொருளுதவுதல்.

ளி

னி அடிக்கடி என்னால் எழுதிக் கொண்டிருக்க முடியாது. 'தமிழ் வரலாறு' என்ற நூல் அடுத்த மாத நடுவில் வெளிவரும். சை. சி.நூ.ப.க.விற்கு எழுதி வாங்கிக் கொள்க.

வள்ளுவர் விழா

த.ப.செ.

போடிநாயக்கனூரில் இருந்து நாளும் வேளையும் பற்றிய செய்தி வந்தது. வருகின்ற ஞாயிறு (8.2.70) காலை 9 மணிக்கு என் சொற்பொழிவு. வெள்ளியிரவே வில்லிபுரத்தில் திருவனந்தபுரம் விரைவான் ஏறி மறுநாட்காரி வைகறை திண்டுக்கல்லில் 5.40 மணிக்கு வந்து சேரவேண்டுமென்றும், அங்கிருந்து போடிக்கு இன்னியங்கியில் ஏற்றிச் செல்வதாகவும் செயலாளர் எழுதி யிருக்கின்றார். நான் இரவில் வழிச் செல்ல முடியாதென்றும் எனக்குத் தூக்கமும் கெடாகூடாதென்றும், வெள்ளி திருச்சி சென்று அசோகாவுண்டிச் சாலையில் தங்கிவிட்டு மறுநாள் வைகறை பாண்டியன் விரைவான் ஏறி 6.15 மணிக்குத் திண்டுக்கல் வந்து சேர்வேனென்றும் அவ்வண்டிக்கே காத்திருக்க வேண்டு மென்றும் எழுதிவிட்டேன். ஆதலால் வருகின்ற வெள்ளி நண்பகல் இங்கு அரசினர் பேரியங்கியேறி வழக்கம்போல் மாலை 6 மணிக்கு வந்து சேர்வேன். அன்பு கூர்ந்து காத்திருக்க. மறுநாள் வைகறை எழ வேண்டியிருப்பதால் செல்காலில் அசோகாவுண்டிச் சாலையில் தங்கியிருப்பதே தக்கது. அன்று மதுரையிலிருந்து திரும்பினபோது திரு. பரமசிவம் அமர்த்தி