உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

யிருந்த 3 உரூபா ஒற்றைப் படுக்கையறை, கீழ்நிலையில் ஊணகம் செல்லும் நடையில் வலப்பக்கம் முதலிலுள்ளது, எனக்கு மிக ஏந்தாக விருக்கும்.

அன்று திரு.முத்துக்கிருட்டிணன் தம்பியொடு மாநாட்டுக்கு வந்து இரு படுக்கையறையில் தங்கியிருந்தபோது. நும்மால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவருள் அலுவல் பெறாத ஒரு புலவருமிருந்தார். அவர் என்னொடு போடி வந்து திரும்பின் மிகத் துணையாயிருக்கும். அவருக்குப் போகவரச் செலவு முற்றும் நானே ஏற்றுக் கொள்வேன். சொற்பொழிவிற்கு 100 உரூபாவும் வழிச் செலவிற்கு 100 உருபாவும் பெற்றிருக்கின்றேன்.

ஞாயிறு சொற்பொழிவு முடிந்ததும் திரும்பிவிடுவேன். திரும்புகாலில் (ஞாயிறு இரவு) ஊரகத்தில் தங்கலாம். பிற நேரில். ந.பி. 4.2.70

6

வள்ளுவர் விழா

வருகின்ற ஞாயிறு (8.2.70) காலை போடிநாயக்கனூர்த் திருவள்ளுவர் ஈராயிர ஆட்டை விழாவில் ஒரு சொற்பொழி வாற்ற இருக்கின்றேன்.

நாளை நின்று வெள்ளி இங்கு அரசினர் பேரியங்கி யேறி அன்று மாலை 6 மணிக்குத் திருச்சி வந்து சேர்வேன். அசோகாவுண்டிச் சாலையில் தங்க ஏற்பாடு செய்யுமாறு தி.ந.பிச்சுமணியார்க்கு எழுதியிருக்கின்றேன்.

தொண்டுக் குறிப்பு கொண்டு வருவேன். மறுநாட் காரி வைகறை பாண்டியன் விரைவான் ஏறித் திண்டுக்கல் செல்வேன். ஞாயிறன்றே திரும்பிவிடுவேன். திரும்புகாலில் ஊரகம் ஓரிராத் தங்க விரும்புகின்றேன்.

இல.க.இர. 4.2.70

திரு.வி.க. படிமை நிறுவல்

வருகின்ற ஞாயிறு (2.12.73) திருவாரூரில் திரு.வி.க. படிமை நிறுவல் விழாவென்று புலவர் சரவணத் தமிழனாரிடமிருந்து கடிதம் வந்துவிட்டது. வருகின்ற வெள்ளி அல்லது காரி தி.பா.புலியூர் செல்வேன்.

கா.இ.மு. 27.11.73