உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

மேல்

245

வேலை மிகுதி. எழுநாளும் வேலை செய்தால்தான் முதலாண்டு வேலை முடியும்.

காரி யிரவு விரைவுப் பேரியங்கியில் வந்து ஞாயிறிரவு விரைவுப் பேரியங்கியில் திரும்பவேண்டும்.

நெடுந்தொலைவு. பனிக்காலம். இரவிற் கண்ணொளி குன்றும். வழித்துணை இன்றியமையாதது. அங்கிருந்து ஒருவர் இருமுறை வந்து செல்வதினும் இங்கிருந்து ஒருவர் என்னுடன் வந்து திரும்புவதுமேல்.

திரும்புதல்

மு.வ.ப. 30.12.74

26.1.75 காலை திருமணக்கரணம் முடிந்தவுடன் நண்ப கற்கு முன்னரே விரைவுத் தொடர்வண்டியிலோ, விரைவுப் பேரியங்கியிலோ திரும்பவேண்டும். அதற்கு ஏற்கெனவே பதிவு செய்துவிடவேண்டும்.

இங்கு நள்ளிரவு வந்து சேரினும் நன்றே நிலையத்திலிருந்து (Taxi) யமர்த்திக்கொண்டு வீடுவந்து வீடுவந்து சேரலாம். திருடர் அச்சம் இருப்பதால் இரவே வீடு வந்து சேரல் வேண்டும். பனிக்காலமாதலால் ஏவலன் வெளித்தாழ்வாரத்திற் படுக்க

வியலாது.

இற்றைப் பனி என்னைச் சற்றுத் தாக்கியுள்ளது. ஆதலால் ஈரிரவு அடுத்தடுத்து இராவழிப்போக்கு ஏற்காது. வீட்டை விட்டுத் தனித்து வெளிறேவும் வழிப்போக்கிற்குச் சீட்டு வாங்கவும் எனக்குப் பகலிலும் போதிய கண்ணொளியில்லை.

மு.வ.ப. 31-12-74,

தமிழரசு

மதுரையில் 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு நடைபெறுகிறது. Tiruualluvar's Tamil Usage(திருவள்ளுவர் தமிழ் வழக்காறு) என்னும் தலைப்புப் பற்றி ஒரு கட்டுரை படிக்குமாறு என்னைக் கேட்டிருக்கின்றனர். இசைந்துள்ளேன். கட்டுரை செல்லும். நான் கலந்து கொள்வது உறுதியன்று. கடிதம் ஆங்கிலத்திலேயே அடையாற்றிலிருந்து வந்துள்ளது.